
பாஜக கட்சியை சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கந்து வட்டி புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜெயலட்சுமி. பல்வேறு சீரியல்களிலும், சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், சென்னை பாடி தெற்கு மாட வீதியில் மகளிர் சுய உதவி குழு நடத்தி வரும் கீதா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தேர்தல் நேரத்தில் பாஜகவை சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி தங்களுக்கு அறிமுகமானதாகவும், வங்கி மூலம் கடன் உதவி பெற்று தந்ததோடு வெற்று காசோலை மற்றும் வெற்று பேப்பர் ஆகியவற்றில் கையெழுத்து பெற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தாங்கள் பெற்ற கடனுக்கு ஈடான தொகையை செலுத்தி முடித்துவிட்டதாகவும், ஆனால் தங்களிடம் தொடர்ந்து பணம் கேட்டு ஜெயலட்சுமி மிரட்டுவதாகவும் அவர் புகார் கூறியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் வழக்கறிஞர்கள் என அறிமுகமான ஜார்லஸ், அலேக்சாண்டர் ஆகியோர் வீடுகளுக்குள் வந்து கந்து வட்டி கொடுமை அளிப்பதாகவும் குற்றம்சாட்டினார். கந்து வட்டி கொடுமை அளிக்கும் ஜெயலட்சுமி மற்றும் அவரது நண்பர்களான ஜார்லஸ் மற்றும் அலேக்சாண்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை காவல் ஆணையரிடம் கீதா புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.