விரைவில் வெளிநாடு பறக்கப்போகும் “வலிமை” படக்குழு... எதற்காக தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published Feb 8, 2021, 10:44 AM IST
Highlights

அதற்கு தல அஜித்தே விரைவில் என பதிலளித்ததாக சோசியல் மீடியாவில் தீயாய் தகவல்கள் பரவியது. 

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக பூஜை போட்ட அன்று சொன்னதோடு சரி, அதன் பிறகு எந்த அப்டேட்டும் சொல்லமாட்டேன் என விடப்பிடியாக இருக்கிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.போஸ்டர், பேனர், ட்ரெண்டிங் ஹேஷ்டேக் மூலமாக எல்லாம் அப்டேட் கேட்டு அலுத்து போன தல ரசிகர்கள் கடைசியாக, மூக்குத்தி அம்மனில் ஆரம்பித்து திருச்செந்தூர் முருகன் வரை அப்டேட் கேட்டு வருகின்றனர். 


ஐதராபாத், சென்னை, புனே என மாறி மாறி ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுக்கு சரியான அப்டேட் மட்டும் கிடைக்கவில்லை. வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதல் தல அஜித் அவ்வப்போது ரசிகர்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் மட்டுமே, அவை சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன. சமீபத்தில் ஐதராபாத்தில் ரசிகர்களை சந்தித்த தல அஜித்திடம், அப்டேட் எப்போது என ரசிகர் கேட்ட கேள்வி  எழுப்பியுள்ளார். அதற்கு தல அஜித்தே விரைவில் என பதிலளித்ததாக சோசியல் மீடியாவில் தீயாய் தகவல்கள் பரவியது. 

தற்போது வலிமை படக்குழு இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார்களாம். வலிமை படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படம் பிடிப்பதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் ஸ்பெயின் கிளம்ப தயாராகி வருகிறதாம். பைக்கில் அனல் பறக்கும் சண்டை காட்சிகளை அங்கு படமாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது எல்லாம் சரி ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையாவது வெளியிடுங்கள் என அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

click me!