“கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்கு பின் நலமுடன் இருக்கிறேன்”... சூர்யாவின் ட்வீட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 07, 2021, 10:35 PM IST
“கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்கு பின் நலமுடன் இருக்கிறேன்”... சூர்யாவின் ட்வீட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி

சுருக்கம்

இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி, டாக்டர் ராஜசேகர் குடும்பத்தினர், மலையாள நடிகர் பிரித்விராஜ், மெகா  ஸ்டார் சிரஞ்சீவின் மகனும், பிரபல நடிகருமான ராம்சரண், நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், நிக்கி கல்ராணி, தமன்னா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளனர். 

சோகத்தின் உச்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொற்றிலிருந்து பூரணகுணமடைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி காலமானார். இந்த துயரம் இன்றளவும் ரசிகர்கள், திரையுலகினர் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஜினிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியான பிறகே ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,‘கொரோனா’  பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும்  உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் என பதிவிட்டுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதிரை அடிக்க பாய்ந்த ஞானம்.. எதிரிகளாக மாறும் தம்பிகள்; தடாலடி முடிவெடுத்த குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?