ஜாக்கி சான் பட சீனை அப்படியே ஆட்டையை போட்டு வலிமையில் வைத்த H Vinoth.. வீடியோ வெளியிட்டு விளாசும் நெட்டிசன்கள்

Ganesh A   | Asianet News
Published : Mar 06, 2022, 02:53 PM IST
ஜாக்கி சான் பட சீனை அப்படியே ஆட்டையை போட்டு வலிமையில் வைத்த H Vinoth.. வீடியோ வெளியிட்டு விளாசும் நெட்டிசன்கள்

சுருக்கம்

valimai scene copy : வலிமை படம் வெளியான போது, படத்தின் இரண்டாம் பாதி மிகவும் நீளமாக இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, உடனடியாக அதிலிருந்து 14 நிமிட காட்சிகளை கத்திரி போட்டு தூக்கியது படக்குழு. 

தமிழ் திரையுலகில் தலைசிறந்த நடிகராக வலம் வருபவர் அஜித். இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடித்துள்ள வலிமை திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. 2 ஆண்டு கடின உழைப்புக்கு பின் வலிமை படம் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது ஸ்டண்ட் காட்சிகள் தான். திரையில் பார்க்கும்போதே பதைபதைப்பை ஏற்படுத்தும் வகையில், உள்ள அந்த ஸ்டண்ட் காட்சிகளில் துணிச்சலாக நடித்து அசத்தி உள்ளார் அஜித். அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

வசூலிலும் வலிமை திரைப்படம் மாஸ் காட்டி வருகிறது. படம் வெளியாகி 10 நாட்கள் ஆகும் நிலையில் உலகளவில் 200 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை ஆடி வருகிறது. வலிமை திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வந்தாலும், மறுபுறம் விமர்சன ரீதியாக சில சறுக்கல்களையும் சந்தித்து வருகிறது.

படம் வெளியான போது, படத்தின் இரண்டாம் பாதி மிகவும் நீளமாக இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, உடனடியாக அதிலிருந்து 14 நிமிட காட்சிகளை கத்திரி போட்டு தூக்கியது படக்குழு. இருப்பினும் இப்படத்தின் மீதான நெகட்டிவ் விமர்சனங்கள் குறைந்தபாடில்லை. தொடர்ந்து வந்துகொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில், தற்போது காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது வலிமை திரைப்பட,ம். அதன்படி கடந்த 2004-ம் ஆண்டு ஜாக்கிசான் நடிப்பில் வெளியான போலீஸ் ஸ்டோரி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை வலிமை படக்குழு அப்படியே காப்பி அடித்து உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த இரு கிளைமாக்ஸ் காட்சிகளையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்.... Naane Varuven Movie : என்ன பொசுக்குனு அடிதடில இறங்கிட்டாங்க... தனுஷ் - செல்வராகவன் இடையே திடீரென வெடித்த மோதல்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தி கோட் படம் பிடிக்கும்-பாகிஸ்தான் ரசிகை உருக்கம்: உலகளவில் டிரெண்டாகும் விஜய்யின் ஜன நாயகன்!
கழுத்தைபிடித்து வீட்டைவிட்டு துரத்தப்பட்ட தங்கமயில்-அதிர்ச்சியில் ஆடிப்போன பாக்கியம், மாணிக்கம்!