
தல அஜித்தின் 'வலிமை' மோஷன் போஸ்டர் வெளியான சில தினங்களிலேயே 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை செய்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தல அஜித் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பான வலிமை திரைப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் BayView Projects மற்றும் Zee Studios இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அச்சியுந்த் குமார், ராஜ் அய்யப்பா, புகழ் மற்றும் யோகி பாபு உடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
2019ம் ஆண்டு படத்திற்கு பூஜை போட்டதிலிருந்தே தல ரசிகர்கள் அப்டேட் கேட்டு ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் இரண்டு முறை வீசிய கொரோனா அலையால் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதை தொடர்ந்து திடீர் என ஜூலை 11 ஆம் தேதி, கடந்த ஞாயிற்று கிழமை ரைஸ்கர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
மேலும் தொடர்ந்து அடுத்த, அடுத்த அப்டேட் வெளியாகி வருகிறது. நேற்றைய தினம் கூட தல அஜித் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக, சில தினங்களில் ஐரோப்பா செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், அஜித்தின் 'வலிமை' பட போஸ்டர் வெளியான சில தினங்களிலேயே சுமார் 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, படக்குழு... தல அஜித் செம்ம ஸ்டைலிஷாக பைக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த தகவலையும் வழக்கம் போல் தல ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.