நல்லதே நடக்கும்... முதல்வரை சந்தித்து 5 லட்சம் நிவாரண நிதி வழங்கிய நடிகர் வடிவேலு!

By manimegalai aFirst Published Jul 14, 2021, 10:47 AM IST
Highlights

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக கொடிகட்டி பரந்த பிரபல நடிகர் வடிவேலு, இன்று தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
 

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக கொடிகட்டி பரந்த பிரபல நடிகர் வடிவேலு, இன்று தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

கொரோனா தொற்றால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பக்கம் என்றால், மற்றொரு புறம் கொரோனா தொற்று தலை தூக்கியதில் இருந்து பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து, அன்றாட உணவிற்கு கூட கஷ்டப்படும் சூழல் உருவாகியது. தற்போது தமிழகம் முழுவதும், மத்திய - மாநில அரசுகளின் துரித நடவடிக்கையால்,  கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சகஜ நிலை திரும்பி வருகிறது.

எனினினும் மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அதிகம் மக்கள் கூட கூடிய இடங்களான திரையரங்குகள், கேளிக்கை பூங்காக்கள் போன்றவை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விதமாக, சுமார் 1 கோடி தடுப்பூசிகள் வேண்டும் என... மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டுள்ளது. தடுப்பூசி போட்டு கொள்வதன் அவசியம் குறித்தும் தினம் தோறும் சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பல பிரபலங்கள் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிவாரணம் வழங்கியுள்ள நிலையில்,  தற்போது பிரபல காமெடி நடிகர் வடிவேலு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ரூ.5 லட்சம் நிதி வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்... " தமிழ் நாட்டை உலகமே உற்று பார்க்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு கட்டுப்படுத்தியுள்ளார் என்றும், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம் என கூறினார். மீண்டும் அதிக படங்களில் நடிப்பீர்களா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, நல்லதே நடக்கும் என தெரிவித்தார். அதே போல் தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து விடாதீர்கள் என்றும் உணர்வு பொங்க பேசினார். 

  


 

click me!