
லீனா மணிமேகலையின் முன்னெடுப்பில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ரஞ்சனி,சின்மயி ஆகியோர் நேற்று ‘மி டு’ தொடர்பாக நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு முடிவில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான சந்திப்பாக மாறியுள்ளது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் சம்பந்தப்பட்ட அனைவருமே பத்திரிகையாளர்கள், அதிலும் பா’வில் துவங்கும் குறிப்பிட்ட ஒரு தனியார் தொலைக்காட்சி அருவருப்பான முறியில் கேள்விகேட்டதாகவும் தங்கள் முகநூல் பக்கங்களில் குமுறிவருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ள பெண்போராளி வளர்மதியின் இந்தப்பதிவு ஒரு சாம்பிள்...
...உங்கள் ஊடக தர்மமும் கேள்விகளும் H. ராஜா, ஆளுனர் வகையராக்களிடம் கைகட்டி வாய்ப் பொத்தி இருக்குமல்லவா?
இவர்களை நோக்கி இத்தனை கேவளமான கேள்விகளை வீசும் ஊடகவியலாளர்களே உங்கள் அம்மா, தங்கை, அக்கா, மனைவி, பெண் குழந்தை ஆகியவரிடம் கேட்டுப் பாருங்கள் அவர்களுக்கு எத்தனை Me too சம்பவங்கள் இருக்குமென்று தெரிந்து கொள்வீர்கள்.
"அவன் எங்க தொட்டான், என்ன பண்ணான், exact ஆன இடம் எது?" இந்த வகையான கேள்விகளை Leena Manimekalai #சின்மயி யிடம் கேட்டது போல் உங்கள் வீட்டுப் பெண்களிடம் கேட்டுப் பாருங்கள் #பிஞ்ச_செருப்ப_சாணியில முக்கி ஓட ஓட அடித்திருப்பார்கள்...
இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது எங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை, அத்துமீறல்களை நாங்கள் தைரியமாக வெளியில் சொல்ல.
எங்களுக்கு துணை நிற்கவில்லை என்றாலும், உங்கள் ஆணாதிக்க வக்கிரங்களை எங்கள் மீது வாரி இறைக்காமல் ஓரமாய் ஒதுங்கி நில்லுங்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.