ஆண்களுக்கும் விபச்சார உரிமை வேண்டும்! சபரிமலை விவகாரம் குறித்து நடிகர் சாருஹாசன் அதிரடி!

By manimegalai aFirst Published Oct 21, 2018, 1:22 PM IST
Highlights

காலம் காலமாக கடை பிடித்து வரும் ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை தகர்க்கும் விதத்தில், உச்ச நீதி மன்ற தீர்ப்பு இருப்பதாக சிலர் கூறி வந்தாலும், இந்த தீர்ப்பு சிலர் ஆதரவு தெரிவித்து.. பெண்களையும் சபரி மலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என கூறிவருகிறார்கள்.

மேலும் இந்த தீர்ப்பு குறித்து, அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் சபரிமலை விவகாரம் குறித்து ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் தங்களுடைய கருத்தை தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர், கமல்ஹாசனின் சகோதரருமான சாருஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சபரிமலை விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

ஒரு தவறான சமத்துவம். சபரிமலைக்கு செல்வதில் கேட்கப்படும் சமத்துவம், பெண்கள் ஆண்களின் பொதுக் கழிப்பறையில் உட்காரும் உரிமை கேட்பது போன்றது. ஏன் புகை பிடிப்பதிலும் தண்ணி அடிப்பதிலும் சமத்துவம் கேட்பதில்லை? அதையெல்லாம் கேட்டால் நாங்கள் ஆண் விபசார உரிமை வேண்டும்' என சாருஹாசன் தெரிவித்துள்ளார்.

click me!