
கவிஞர் வைரமுத்துவிற்கு தர்மதுரை படத்தில் எந்த பக்கம் காணும் போது வானம் ஒன்று என்ற பாடலுக்காக சிறந்த பாடலாசிரியர் என்ற விருது கிடைத்துள்ளது.
இன்றைய நாள் உலக சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது. அதே வேளை மன அழுத்தத்திற்கு எதிரான நாள்.
விருது பெற்றுள்ள இப்பாடலும் மன அழுத்தத்தை போக்கும் பாடல். பாடல் வந்த பிறகு எனக்கு கடிதம் மூலம் சில ரசிகர்கள் தாங்கள் மன அழுத்தத்தில் இருந்து மீண்டதாக கூறினார்கள்.
அதற்கு மேலாக தேசிய விருது கிடைத்துள்ளது. தகுதியின் அடிப்படையில் தமிழ் சினிமாவிற்கு 5 கிடைத்தது. கொடுத்த தேர்வுக்குழுவிற்கு நன்றி.
முதல் முறை நான் தேசிய விருது வாங்கிய போது கண்ணீர் விட்டேன். ஏனெனில் எனக்கு அப்படி ஒரு விருது உள்ளது என்பதே எனக்கு தெரியாது என கூறினார்கள்.
விவசாயிகளை பற்றியும், அவர்களின் வாழ்வாதாரம் பற்றியும் படம் வந்தால் அந்த படத்தில் ஒரு ரூபாய் கூட வாங்காமல் பாட்டு எழுதிக்கொடுக்க தயார் என அவர் கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.