சாப்டுவேர் இன்ஜினியர் டு பைட்டர் பைலட் .. அதே டாக்டர் ... ''அலைபாயுதே'' காற்றுவெளியிடை

 
Published : Apr 07, 2017, 04:33 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
சாப்டுவேர் இன்ஜினியர் டு  பைட்டர் பைலட் ..  அதே டாக்டர் ...  ''அலைபாயுதே'' காற்றுவெளியிடை

சுருக்கம்

kaatru veliyidai movie review

கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்காக படங்களை பார்க்கும் ரசிகர்கள், தற்போது தரமான படத்தை இயக்கும் இயக்குநர்களுக்காக திரையரங்கிற்கு போகும் காலம் வந்துவிட்டது.அப்படி தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குனர் மணிரத்னம். 

தன்னிடம், உதவி இயக்குனராக பணிபுரிந்து பின் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் கொடுத்து இன்று முன்னணி கதாநாயகனாக நடித்து வரும் கார்த்தியை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் மணிரத்னம். இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அதிதி ராவ் அறிமுகம் கொடுத்துள்ளார்.

காற்று வெளியிடை திரைப்படம் வெளிவருவதற்குள்   இது ரோஜா, உயிரே தழுவல் என பல கதை ஓட, மணிரத்னம் அதையே எடுத்து வைத்தாரா? அதையும் தாண்டி ரசிகர்களை கவர்ந்தாரா? என்பதை பார்ப்போம்.
கதை சுருக்கம்:

கார்த்திக் ஏர் போர்ஸிலில் போர் பிரிவில் வேலை செய்கிறார், படத்தின் ஆரம்பத்திலேயே கார்கில் போரில் சண்டையிடும் போது ப்ளேட் வெடித்து பாகிஸ்தான் ஆர்மியிடம் சிக்குகின்றார், அதை தொடர்ந்து ப்ளாஷ்பேக்காக தன் மலரும் நினைவுகளாக அதிதியுடன் காதலை நினைவு கூர்கின்றார்.

அதிதி மிலிட்ரி கேம்பில் மருத்துவராக இருக்க, விபத்தில் கார்த்தி சிக்கி மருத்துவமனை கொண்டு வரப்படுகின்றார், அங்கு அதிதியை பார்த்தவுடன் காதல், பின் சொல்லாமலேயே சில காலம் காதல் வளர்கிறது.

பிறகு சொல்லி ஒரு சில நாட்கள் காதல் என இருக்க, கார்த்தியின் ஆணாதிக்க குணம், அதிதியை அவ்வபோது வெறுப்பேற்ற, கார்கில் போர் செல்லும் கார்த்தியிடம் ‘இனி நமக்கு செட் ஆகாது’ என சொல்லி அதிதி பிரிந்து செல்கின்றார்.

அதன் பிறகு ரியல் லைபில் பாகிஸ்தான் ஆர்மியடம் இருந்து கார்த்தி எப்படி தப்பிக்கின்றார், அதிதி என்ன ஆனார் என்பதே மீதிக்கதை.
 
படம் குடித்து அலசல்:

 கிளீன் ஷேவ் செய்த கார்த்தி, அழகாக இருந்தாலும் ரசிகர்கள் அவரை ஏற்க முடியவில்லை.  ஆனால், போக போக, பக்கா மணிரத்னம் ஹீரோவாக மாறுகின்றார், எப்போது சண்டை, ஒரு உயிரை கொல்வது என இருக்கும் கார்த்தியிடம் காதல் வருகையில் தன் ஆணாதிக்க குணத்தை காட்டும் இடத்திலும், பிறகு தான் செய்தது தவறு என கெஞ்சி காதலை சொல்லும் இடத்திலும் செம்ம ஸ்கோர் செய்கின்றார்.

அதிதி எப்படி பார்த்தாலும் ஒரு அந்நிய முகமாகவே தான் தெரிகின்றார், படத்தில் என்ன தான் நன்றாக நடித்திருந்தாலும், நம்ம ஆடியன்ஸ் ரசனைக்கு ஏற்ற முகம் இல்லை, இருந்தாலும் அவரும் தனக்கான உரிமையை கார்த்தியிடம் கேட்கும் இடத்திலும், அதற்காக அவர் சண்டையிட்டு விலகும் தருணம், பிறகு மீண்டும் கார்த்தியை கைவிடமுடியாமல் அவரை துரத்தி வருவது என நன்றாகவே நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஒரு படி மேலாக கர்ப்பமான பிறகு கல்யாணம், அதைவிட கிளைமேக்ஸில் ஒன்று செய்திருக்கின்றார், இதெல்லாம் ஓவர் அட்வான்ஸ் சார்.

எப்போதும் மணிரத்னம் படம் என்றாலே காதல் காட்சிகள் நிரம்பி வழியும், திரையரங்கில் நம்மை அறியாமல் நாமே சிரித்துக்கொண்டு இருப்போம், அதேபோல் தான் இப்படத்தின் முதல் பாதி, ஆனால், இரண்டாம் பாதியில் காதல் அதிகம் என்றாலும் பார்க்கும் பொறுமை தான் இல்லை. எப்போது பாகிஸ்தான் காட்சிகள் வரும் என நினைக்கத்தோன்றும் வகையில் உள்ளது.

பிளஸ்:

படத்தின் டெக்னிக்கல் டீம், ரவிவர்மனின் ஒளிப்பதிவு, ரகுமானின் இசை.

படத்தின் முதல் பாதி, காதல் காட்சிகள்.

கிளைமேக்ஸ் கடைசி 20 நிமிடம்.

மைனஸ்:

இரண்டாம் பாதியில் மெதுவாக நகரும் திரைக்கதை.

மொத்தத்தில் மணி சார் உங்க ஆடியன்ஸிற்கு ஓகே காற்று தென்றலாக உள்ளது, மற்ற ஆடியன்ஸையும் கொஞ்சம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி