வளர்பிறையில் கறை எதற்கு?.... விஜய் சேதுபதிக்கு வலிக்காமல் புத்தி சொன்ன வைரமுத்து...!

By Kanimozhi PannerselvamFirst Published Oct 15, 2020, 7:09 PM IST
Highlights

இதையடுத்து கவிஞர் வைரமுத்து தனது கவிதை நடையிலேயே விஜய் சேதுபதிக்கு வலுவான கோரிக்கை வைத்துள்ளார். 

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று கதையான 800 படத்தில் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்ற எதிர்ப்பு வலுத்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி என அரசியல் வட்டாரத்தில் இருந்தும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜாவும் அதே கருத்தை வலியுறுத்தி விஜய் சேதுபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். 

அதில், இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா?
எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள். 
தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவுகொள்ளப்படுவீர்கள். துரோகிக்கு துணை போகும் உங்களை நினைத்து கோபப்படுவதா ? இல்லை உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பாதா ? அனைத்து துறைகளிலும் உலகரங்கில் தமிழர்களின் பங்களிப்பு என்னவென்று வரலாற்றை புரட்டிபாருங்கள்.. பாடம் சொல்லும். ஒரு செய்தியை அழுத்தமாக இங்கு பதிவிட விரும்புகிறேன் என கூறியிருந்தார். 

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் கெளதமன் உள்ளிட்டோரும் விஜய் சேதுபதி 800 படத்திலிருந்து விலக வேண்டும் என வலுவாக கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கவிஞர் வைரமுத்து தனது கவிதை நடையிலேயே விஜய் சேதுபதிக்கு வலுவான கோரிக்கை வைத்துள்ளார். 

 

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷுடன் நடித்துள்ள “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர்... இந்த புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா?

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 

கலையாளர் 
விஜய் சேதுபதிக்கு…

சில நேரங்களில்
செய்து எய்தும் புகழைவிடச்
செய்யாமல் எய்தும் புகழே
பெரிதினும் பெரிது செய்யும்.

நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள்.
வளர்பிறையில் கறை எதற்கு?

இன உரிமைக்காகக்
கலை உரிமையை
விட்டுக் கொடுப்பதே விவேகம்;
நீங்கள் விவேகி. விஜய் சேதுபதி
என குறிப்பிட்டுள்ளார். 

click me!