அடுத்த வார ஏவிக்ஷனில் இருந்து தப்பிய இரண்டு பிக்பாஸ் போட்டியாளர்கள்! யார் யார் தெரியுமா?

Published : Oct 15, 2020, 05:31 PM IST
அடுத்த வார ஏவிக்ஷனில் இருந்து தப்பிய இரண்டு பிக்பாஸ் போட்டியாளர்கள்! யார் யார் தெரியுமா?

சுருக்கம்

இந்த முறை, கடந்த 3 சீசன்களை விட போட்டியாளர்கள் தங்களை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றி கொள்ள பல டாஸ்க்குகளை கொடுக்கிறார் பிக்பாஸ் என்பது போல் தெரிகிறது. ஏற்கனவே எவிக்ஷன் ப்ரீ டிக்கெட் என்கிற ஒன்றை கொடுத்த பிக்பாஸ் நேற்று சற்று வித்தியாசமான டாஸ்க் ஒன்றை போட்டியாளர்களுக்கு கொடுத்தார்.  

இந்த முறை, கடந்த 3 சீசன்களை விட போட்டியாளர்கள் தங்களை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றி கொள்ள பல டாஸ்க்குகளை கொடுக்கிறார் பிக்பாஸ் என்பது போல் தெரிகிறது. ஏற்கனவே எவிக்ஷன் ப்ரீ டிக்கெட் என்கிற ஒன்றை கொடுத்த பிக்பாஸ் நேற்று சற்று வித்தியாசமான டாஸ்க் ஒன்றை போட்டியாளர்களுக்கு கொடுத்தார்.

இதுகுறித்து நேற்று வெளியான மூன்றாவது புரோமோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இது உங்களுடைய டெய்லி டாஸ்க் என்றும் இந்த டாஸ்க் உங்களை அடுத்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்ற கூடிய சக்தி வாய்ந்தது. இதற்காக நீங்க உங்களில் இருந்து ஒரு கூட்டாளியை தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு வட்டத்திற்கு வெளியே நின்று  ஒருவர் பாலை பௌலில் போட்டு விட்டால்... சரியான காரணத்தோடு அவர் ஒரு ஹவுஸ் மேட்ஸை வெளியேற்றலாம். கடைசி வரை நின்று ஜெயிப்பவரும், அவரது கூட்டாளியும் அடுத்த வாரம் நாமினேட் செய்ய மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அடுத்த வார நாமினேஷனில் இடம் பெற கூடாது என போட்டியாளர்கள் நடுவில் வைக்க பட்ட பவுலில் பாலை போட முயற்சி செய்தனர். மிகவும் வலிமையான போட்டியாளர்கள் என கருத்தப்பட்டவர்கள் எந்த ஒரு நட்பும் பாராமல், மற்றொருவரை வெளியேற்றினர்.

அப்படி அனைத்து போட்டியாளர்களும் சென்ற பின், கடைசியாக இருந்தது நடிகை ரேகா மற்றும் சனம் ஷெட்டி தான். சனம் ஷெட்டி திறமையாக பவுலில் பந்தை போட்டு ரேகாவை வெளியேற்றினார். இதனால் சனமும் அவருடைய கூட்டாளி வேல்முருகனும், அடுத்த வாரம் நாமினேட் செய்ய பட மாட்டார்கள் என்பதையும் பிக்பாஸ் அறிவித்தார்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Karthigai Deepam : வீட்டை அடித்து நொறுக்கிய சாமுண்டீஸ்வரி... பரமேஸ்வரி பாட்டி வீட்டில் கார்த்திக் - ரேவதிக்கு நடந்தது என்ன?
Vishwanath and Sons Review : சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ