வெறுப்பேற்றிய அர்ச்சனா... கடுப்பான சுரேஷ்..! உள்ளே வந்ததுமே ஆட்டத்தை ஆரம்பித்த மகராசி..!

Published : Oct 15, 2020, 01:57 PM ISTUpdated : Oct 15, 2020, 01:58 PM IST
வெறுப்பேற்றிய அர்ச்சனா... கடுப்பான சுரேஷ்..! உள்ளே வந்ததுமே ஆட்டத்தை ஆரம்பித்த மகராசி..!

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் அணைத்து போட்டியாளர்களையும் கடுப்பேற்றி, ஏகப்பட்ட வெறுப்புகளை சம்பாதித்து வைத்துள்ளவர் சுரேஷ்.  இவர் அனைவரையும் வெறுப்பேற்றும் விதத்தில் நடந்து கொண்டாலும், இவர் மூலம் உள்ளே நல்லவர்கள் போல் நடித்து கொண்டிருக்கும் பலரது முகமூடி கிழிந்து வருகிறது.  

பிக்பாஸ் வீட்டில் அணைத்து போட்டியாளர்களையும் கடுப்பேற்றி, ஏகப்பட்ட வெறுப்புகளை சம்பாதித்து வைத்துள்ளவர் சுரேஷ்.  இவர் அனைவரையும் வெறுப்பேற்றும் விதத்தில் நடந்து கொண்டாலும், இவர் மூலம் உள்ளே நல்லவர்கள் போல் நடித்து கொண்டிருக்கும் பலரது முகமூடி கிழிந்து வருகிறது.

இந்நிலையில் இன்றைய முதல் புரோமோவில், பிக்பாஸ் வீட்டுக்குள் அர்ச்சனா வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். இவர் வந்ததுமே, சுரேஷை வம்புக்கு இழுக்கும் காட்சிகள் தான் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் வெளியாகியுள்ளது. 

ஒரு வார நிகழ்ச்சியை அவர் டிவியில் பார்த்துவிட்டு வந்துள்ளதால் வீட்டில் உள்ள நிலைமை என்ன என்பவதும், மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதும் அர்ச்சனாவுக்கு நன்கு தெரியும். அதனால் மிகவும் புத்திசாலித்தனமாக அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், சுரேஷ் சக்கரவர்த்தியின் சமையல் பிடிக்காதவர்கள் யார் என்று அர்ச்சனா கேள்வி கேட்க, அதற்கு சமையல் மட்டும் தான் பிடிக்கும் அதனால் கை தூக்க முடியலை’ என்று குரல் பதிலாக வர, ‘எவன் அவன்’ என்று அர்ச்சனா கேள்வி கேட்க, அதற்கு சுரேஷ், ‘அதை சொன்னவன தான் கேட்கணும்’ என்று கூற அதற்கு அர்ச்சனா ‘கேட்டு சொல்றீங்களா? என்று கிண்டலாகவே கேட்கிறார், ‘அவனை அனுப்பிச்சிங்கன்னா கேட்டு சொல்றேன்’ என்று சுரேஷ் மீண்டும் பதிலடி கொடுக்கின்றார்

பின்னர் சுரேஷுக்கு கண்ணு போடுகிறார்கள் என சுற்றி போட்டது மட்டும் இன்றி, நீங்கள் ஒரு தொகுப்பாளர் என கூறுகிறார். பின்னர் ஏதோ சுரேஷ் ஏதோ கூற அதற்க்கு, அவரை கடுப்பேற்றும் விதத்தில் பதில் கொடுத்து வந்த முதல் நாளே தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் அர்ச்சனா. எனவே மக்கள் எதிர்பார்த்ததை விட வரும் நாட்கள் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சரத்குமார் உடனான காதல் முறிவுக்கு பின்... திருமணமே செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழும் நடிகை..!
அடேய் விடுங்கடா... கூட்டத்தில் சிக்கிய அனிருத்; அலேக்காக தூக்கிச்சென்ற பவுன்சர்கள் - வைரல் வீடியோ