
கடந்த வாரம் தனியார் பல்கலைக்கழகம் சார்பில் வைரமுத்துவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த பட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்குவதாக இருந்தது. இந்நிலையில் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை நினைவுபடுத்தி சின்மயி பதிவிட்ட டுவிட்டருக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் ஆண்டாள் குறித்து வைரமுத்து சர்ச்சை கருத்து கூறியதையும் ராஜ்நாத் சிங்கிற்கு தமிழக பாஜகவினர் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பட்டமளிப்பு விழாவை மத்திய அமைச்சர் ராஜ்நாத் ரத்து செய்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதிய அழைப்பிதழ் அச்சிடப்பட்டது. அதில் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்குவது குறித்த அறிவிப்பு நீக்கப்பட்டது. வேறு ஒரு சிறப்பு விருந்தினரை வைத்து மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.
இதையடுத்து கவிஞர் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ரத்து செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு நன்றி தெரிவித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "எனக்காகக் குரல்கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள தமிழ் அமைப்பினர் அனைவர்க்கும் நன்றி.
இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...?" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.