டியர் சின்மயி மேடம் கவிஞர் வைரமுத்துவுக்காக ஒரு சின்ன கோரிக்கை...

Published : Feb 23, 2019, 11:41 AM IST
டியர் சின்மயி மேடம் கவிஞர் வைரமுத்துவுக்காக ஒரு சின்ன கோரிக்கை...

சுருக்கம்

சுய தம்பட்டம் அடித்துக்கொள்வதில் சுமார் 42 வருடங்களாக கவிப் பேரரசு வைரமுத்துவை மிஞ்ச ஆளே இல்லை. தன் பாடல் குறித்து அவர் அப்படி சிலாகித்தார். இவர் எப்படி சிலாகித்தார் என்று பாட்டை எழுதி முடிப்பதற்கு முன்பே ஒரு ப்ரஸ் ரிலீஸை எழுதி வைத்து அனைத்து பத்திரிகைகளுக்கும் தவறாமல் அனுப்பிவைத்துவிடுவார்.

சுய தம்பட்டம் அடித்துக்கொள்வதில் சுமார் 42 வருடங்களாக கவிப் பேரரசு வைரமுத்துவை மிஞ்ச ஆளே இல்லை. தன் பாடல் குறித்து அவர் அப்படி சிலாகித்தார். இவர் எப்படி சிலாகித்தார் என்று பாட்டை எழுதி முடிப்பதற்கு முன்பே ஒரு ப்ரஸ் ரிலீஸை எழுதி வைத்து அனைத்து பத்திரிகைகளுக்கும் தவறாமல் அனுப்பிவைத்துவிடுவார்.

இதோ நேற்றைய பெருமை பீத்தலான அவரது பத்திரிகைச் செய்தி....சீமானின் தம்பி திரைக்களமும், ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9-ம் இணைந்து தயாரிக்க, இரா.சுப்ரமணியன் இயக்கும் படம் 'அமீரா’. ஒரு திருடனின் வாழ்க்கையில் ஓர் அழகான பெண் குறுக்கிடுகிறாள். அவள் அழகு அவனைத் திக்குமுக்காட வைக்கிறது. அந்த அழகின் வழியே வந்த அன்பு அவனது திருட்டுத் தொழிலையே மாற்றுகிறது; அவன் திருந்துகிறான். அவள் எப்படிப்பட்ட அழகி, அந்த அழகு அவனை என்னவெல்லாம் செய்தது என்பதுதான் பாட்டு. 15 நிமிடங்களில் பாடல் எழுதி முடித்தாராம் கவிஞர் வைரமுத்து. 

அந்த நேரத்தில் தொலைபேசியில் வந்த இயக்குநர் சீனுராமசாமியிடம் பேச்சோடு பேச்சாக அந்தப் பாடலைப் படித்துக் காட்டியிருக்கிறார். உணர்ச்சிவசப்பட்டு ஆஹா என்ற சீனுராமசாமி, இது என் கதைக்குத்தான் பொருந்தும். என் கதாநாயகிக்குத்தான் பொருந்தும். இதை எனக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று குழந்தைபோல் அடம்பிடித்தாராம். இது சீமானுக்கு என்று எழுதப்பட்ட பாட்டு; கொடுத்த வாக்கு மாறக்கூடாது என்றாராம் வைரமுத்து. இந்தப் பாட்டுக்கு மட்டும் 10 லட்சம் வாங்கித் தருகிறேன் கொடுங்கள் என்றாராம் சீனுராமசாமி. 10 ரூபாய் கொடுத்தாலும் சீமானுக்குத்தான் இந்தப் பாட்டு என்றாராம் கவிஞர் சிரித்துக்கொண்டே.

இதோ அந்த அழகான பாட்டு :

ஆதார் அட்டையிலும்
அழகானவள் 
அழுகின்ற வேளையிலும் 
அழகானவள்
ஆடை சூடியும்
அழகானவள்
அதனைத் தாண்டியும்
அழகானவள்

பேசும்போதும் அழகானவள்  - நீ
பேசாத போது பேரழகானவள்
நெற்றி சரியும்
கற்றை முடியைச்
சுட்டு விரலால்
சுற்றும் போது
சுழற்றியடிக்கும் புயலானவள்

*
புன்னகையில்
பைத்தியமாய் ஆனேன்
பூப்பறிக்கும் உயரம் கண்டு
புத்திமாறிப் போனேன்
ஓடைப்பார்வை தீண்டிச் செல்ல
அரசனாகிப் போனேன் 
ஆடை ஓரம் உரசும் போது
அடிமையாகிப் போனேன்

சாயம்போன  வாழ்வோடு
நிறமூட்டினாய்
ஈயம்போன பாத்திரத்தில்
ஒளியேற்றினாய்
அழகென்ற பொருள்கொண்டு
அன்பென்ற வழிகண்டு
திருடுகின்ற என்வாழ்வைத்
திருவாக்கினாய்...

பின் குறிப்பு; டியர் சின்மயி மேடம் கவிஞர் பழையபடி தன்னோட அட்ராசிட்டியை ஆரம்பிக்கப் பாக்குறார்.  ஒரு 'மிடு’ ரீ ட்விட் ப்ளீஸ்..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!
சீரியல் நடிகை தற்கொலைக்கான காரணம் என்ன? பின்னணியில் திடுக்கிடும் தகவல்!