
மறைந்த திரைப்பட இயக்குனர் பாலசந்தரின் நினைவாக அவரது சிலையை வடிவமைத்து சொந்த ஊரில் நிறுவ கவிஞர் வைரமுத்து திட்டமிட்டார்.
பிரபல திரைப்பட இயக்குனரும் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்பட்ட பாலசந்தர் கடந்த 2014ம் ஆண்டு மரணமடைந்தார்.
அவரது திரைப்படங்களில் கவிஞர் வைர முத்து பாடல்கள் எழுதியுள்ளதுடன் மிகவும் நெருங்கிய நண்பராகவும் இருந்துள்ளார். அவரது நட்பு தனக்கு கிடைத்த இறைவன் கொடுத்த பரிசு என்று வைர முத்து நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
மேலும் பாலசந்தரின் நினைவாக அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் சிலை அமைக்க திட்டமிட்டு இருந்தார். தனது சொந்த செலவில் வெங்கல சிலையையும் அவர் செய்துள்ளார். நாளை மாலை அந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்தினம், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி மாலை 5மணிக்கு நடைபெறுகிறது. நட்பு ரீதியாக பழகிய அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று அவர் மரணமடைந்ததில் இருந்தே தான் நினைத்து வந்ததாவும் அந்த ஆசை நாளை மாலை நிறைவேற உள்ளதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.