
சாப்பாடு ராமன் ஆர்த்தி, எந்த வேலையும் செய்யாமல் கலர் கலராக மேக் அப் செய்து கொண்டு, குட்டை குட்டையாய் ஆடை அணிந்து கொண்டு நடு மண்டையில் இரண்டு பூக்களை வைத்துக்கொண்டு எப்படி சினிமாவில் காமெடியாக திரிகிறாரோ அதே போல தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இருக்கிறார்.
பொதுவாக நடிகைகள் நடிக்கும் போதுதான் மேக் அப் போடுவார்கள் ஆனால் ஆர்த்தி மூஞ்சில் கலர் பூசாமல் பார்க்கவே முடியாது.
இது நாள் வரை 15 போட்டியாளர்கள் மத்தியில் தன்னுடைய பாம்பு குணத்தையும், வில்லத்தனத்தையும் காட்டி வந்தவரை யாரும் கண்டு பிடிக்கவில்லை என பல நெட்டிசன்கள் கூறி வந்தனர்.
ஆனால் ஆணழகன் ஆரவ் இதை மிகவும் தந்திரமாக கண்டு பிடித்துள்ளார். இந்த செய்தியை தன்னுடைய காதலி ஓவியாவிடம் தனிமையில் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் கூற, அதற்கு ஓவியா அதுவும் போலி என கூறுகிறார்.
மேலும் ஏய் ஆர்த்தி பாம்பு மாதிரி, நீ இது வரை சினேகன் மற்றும் இன்னும் சிலரோடு சண்டை போட்டுருக்க ஆன உன்ன பத்தி யாரும் தப்ப சொன்னது இல்லை. ஆனால் ஆர்த்தி நடிக்கிறதை இப்போது அனைவரும் கண்டு பிடித்து விட்டனர் என கூறுகிறார்.
அதற்கு ஓவியா., ஜூலி கூட ஆர்த்தி சண்டை போடும் போது அவரது உண்மையான முகம் வெளியே வந்து விட்டது என்றும் யார் எப்படி நடித்தாலும் ஒரு நாள் அவர்கள் உண்மை முகம் வெளிவரும் என ஓவியா கூறுகிறார்.
இதுவரை இவர்கள் ஆர்த்தி நடித்துக்கொண்டிருக்கிறார் என அவர்களுக்குளேயே கூறி வந்தாலும் எப்போது இது ஆர்த்திக்கு தெரிந்து பிரச்சனை வர போகிறது என தெரியவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.