"2021ல் முதல்வர் ஆகலாம்ன்னு இருக்கேன்"... ரஜினியின் அரசியல் வருகையை நக்கலடித்த வடிவேலு...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 13, 2020, 12:28 PM IST
Highlights

மேலும் முதலமைச்சர் பதவி வேண்டாம் என ரஜினி கூறியிருப்பது வரவேற்க்கத்தக்கது, நாட்டு மக்களுக்கு நல்லது செஞ்சால் சரி என்று பாராட்டினார். 

பல ஆண்டுகளாக ரசிகர்களும், தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு தான். நேற்று சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தனது அரசியல் நிலைப்பாடு குறித்தும், மாவட்ட செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் குறித்தும் விளக்கம் அளித்தார். 

இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியாக... நீருக்குள் நின்றபடி... பிகினியில் போஸ் கொடுத்த பிரபல நடிகை...!

மக்கள் எழுச்சி ஏற்பட வேண்டும், சிஸ்டத்தை சரி செய்யனும் அப்புறம் தான் அரசியலுக்கு வருவேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி கட்சி ஆரம்பிக்க போவது உறுதி என்று அறிவித்துள்ள ரஜினிகாந்த், நான் முதலமைச்சர் இல்லை என்று கூறியிருப்பது ரசிகர்களையும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. 

இதையும் படிங்க: டவலை மட்டும் கட்டிக்கொண்டு கவர்ச்சி போஸ்... எல்லை மீறும் யாஷிகா ஆனந்த்...!

இதனிடையே, திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைகை புயல் வடிவேலு நேற்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது, ஏன் அவருக்கே கூட தெரியாது என நகைச்சுவையுடன் பதிலளித்தார். 

இதையும் படிங்க: வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள்... திரும்ப சின்னத்திரைக்கே போயிடுறேன்... புலம்பும் பிரபல நடிகை...!

மேலும் முதலமைச்சர் பதவி வேண்டாம் என ரஜினி கூறியிருப்பது வரவேற்க்கத்தக்கது, நாட்டு மக்களுக்கு நல்லது செஞ்சால் சரி என்று பாராட்டினார். தொடர்ந்து பேசிய அவர், 2021ல் நான் முதலமைச்சர் ஆகலாம்ன்னு இருக்கேன்... அதை சிலர் கெடுக்கப் பார்க்கிறார்கள்... நான் சி.எம். பதவிக்கு நின்னா எனக்கு ஓட்டு போடுவீங்க தானே என நகைச்சுவையாக கேட்டுவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டார்.

click me!