Vadivelu "வரேன் திரும்ப வரேன்" வடிவேலுவின் மாஸ் ரீஎண்ட்ரி: வைகை புயலிடம் வரிசை கட்டும் இயக்குனர்கள்!

By Kanmani PFirst Published Dec 2, 2021, 2:43 PM IST
Highlights

Vadivelu மீண்டும் சினிமாவுக்கு திரும்பியுள்ள வடிவேலுவின் கை  வசம் இரண்டு படங்கள் உள்ளன. மாரி செல்வராஜின் புதிய படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளார்.

இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட மோதலால் நகைச்சுவை நடிகர் வடிவேலு புதிய படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் பல வருடங்களாக அவரால் நடிக்க முடியவில்லை. சமீபத்தில் சமரச பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு தடை நீங்கியதால் வடிவேல் மீண்டும் உற்சாகத்தோடு நடிக்க வந்துள்ளார். 

நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு சமீபத்தில் நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் பழைய உச்சாகத்தோடு வடிவேலு திரைப்படங்கள் நடிக்க தயாராகியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே வடிவேலு, இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'நாய் சேகர்' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த ஆண்டு தன்னுடைய பிறந்தநாளை கூட, வடிவேலு 'நாய் சேகர்' படக்குழுவினருடன் தான் கொண்டாடி மகிழ்ந்தார். இது குறித்த புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளார். மாரி செல்வராஜ், கர்ணன் என்கிற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இதைத் தொடர்ந்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மாரி செல்வராஜ். இப்படத்தை பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். இந்த படத்தை முடித்த கையோடு உதயநிதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவும் மாரி செல்வராஜ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவும், இப்படத்தில் தற்போது இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் அவர் உதயநிதி ஸ்டாலினுடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்தாண்டு தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம்.

வைகை புயலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. படங்களில் மட்டுமல்லாமல் மீம்ஸ்கள் மூலமாகவும் ரசிகர்களோடு இணைந்து விட்ட வடிவேலுவின் ரீ என்ட்ரி குறித்த உற்சாகம் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டுள்ளது.

click me!