
இந்தியன், விக்ரம் என படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் கமல் கடந்த வாரம் அமெரிக்கா சென்று வந்த கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இதற்குபின் அவருக்கு லேசான இருமல் இருந்துள்ளது. இதையடுத்து பரிசோதனை செய்ததில் கமலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கமல்.
இவர் நடித்துவரும் 'விக்ரம்' படத்தை கமலஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்தை தயாரித்தும் நடித்தும் வருகிறார். இதில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
இதற்கிடையே கமல் ஹாசனின் அடுத்த படத்தை பா.ரஞ்சித் இயக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது. அதோடு கமல்ஹாசனின் பிறந்தநாளன்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியிருந்த பா.ரஞ்சித் ஒரே வரியில் படத்தின் கதையை கூறியதாகவும், அந்த ஒரு வரிபிடித்து போனதால் இருவரும் இணைந்து பணிபுரிய கமல் வாய்ப்பளித்துள்ளதாகவும் தகவல் பரவியது. முன்னதாக பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ஆர்யாவின் "சார்பேட்டா பரம்பரை" படத்தை பார்த்த பிறகு பா.ரஞ்சித்தை பாராட்டியிருந்தார் கமல்.
இந்நிலையில் பா.ரஞ்சித் இயக்கவுள்ள கமலின் அடுத்த படத்தை ராஜ்கமல் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.