Radhe Shyam: பிரபாஸின் காதல் ததும்பும் ரொமான்ஸ்.. 'ராதே ஷியாம்' படத்தில் இருந்து வெளியான தரையோடு தூரிகை பாடல்!

Published : Dec 02, 2021, 12:49 PM IST
Radhe Shyam: பிரபாஸின் காதல் ததும்பும் ரொமான்ஸ்.. 'ராதே ஷியாம்' படத்தில் இருந்து வெளியான தரையோடு தூரிகை பாடல்!

சுருக்கம்

சுமார் 10 வருடங்களுக்கு பின், நடிகர் பிரபாஸ் நடித்துள்ள முழு நீள காதல் படமான 'ராதே ஷ்யாம்' படத்தில் இருந்து, தரையோடு தூரிகை என்கிற ரொமான்டிக் பாடல் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.    

சுமார் 10 வருடங்களுக்கு பின், நடிகர் பிரபாஸ் நடித்துள்ள முழு நீள காதல் படமான 'ராதே ஷ்யாம்' படத்தில் இருந்து, தரையோடு தூரிகை என்கிற ரொமான்டிக் பாடல் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள, பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து 'தரையோடு தூரிகை' எனும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாமின் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், படத்தை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக காதல் ததும்பும் பாடலான 'தரையோடு தூரிகை' பாடல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: Katrina Kaif - Vicky Kaushal wedding: ரகசிய குறியீடுடன் அனுமதிக்கப்படும் விருந்தினர்கள்..! என்ன காரணம்?

 

சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடலில், படத்தின் நாயகனான பிரபாஸ் நாயகி பூஜாவை இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். இதயம் தொடும் இசை, இடங்களுக்கு ஏற்ற பொருத்தமான உடை அமைப்பு, கண்ணைக்கவரும் ஒளிப்பதிவு ஆகியவை இதை ஒரு கனவு பாடலாக ஆக்கி உள்ளன.

மேலும் செய்திகள்: பெண்களும் விரும்பும் கவர்ச்சி குயின்.. ”தமிழ்நாடு மெர்லின் மன்றோ” சில்க் ஸ்மிதா பிறந்தநாள் ஸ்பெஷல்!

 

பாடலின் முக்கிய அம்சமாக நாயகன் மற்றும் நாயகிக்கு இடையேயான 'கெமிஸ்ட்ரி' ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறது. ரசிகர்களை இது மிகவும் கவரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஏனென்றால், இப்பாடலின் போஸ்டர் மற்றும் முன்னோட்டம் வெளியான போதே ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்ந்தது குறிப்பிடத்தக்கது.  

மேலும் செய்திகள்: 'ராஜா ராணி 2' சீரியல் அம்மா நடிகையின் ஆபாச புகைப்படத்தால் பரபரப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்!

 

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். 'தரையோடு தூரிகை' பாடல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதோடு மட்டுமில்லாமல் படம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இப்படம் ஜனவரி 14, 2021 அன்று பல்வேறு மொழிகளில் 'ராதே ஷியாம்' திரைப்படம்  வெளியாக உள்ளது. யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ள இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!
கதறி அழும் விசாலாட்சி; ஆறுதல் சொல்லும் மருமகள்; குணசேகரின் கேம் இஸ் ஓவர் என்று பேசும் ஜனனி: எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்!