BiggBoss5Promo1 தாமரை- அண்ணாச்சி உறவு : பிரியங்காவை மடக்கும் சிபி; காரசார பிக் பாஸ் ப்ரோமோ உள்ளே!

Kanmani P   | Asianet News
Published : Dec 02, 2021, 02:12 PM IST
BiggBoss5Promo1 தாமரை- அண்ணாச்சி உறவு : பிரியங்காவை மடக்கும் சிபி; காரசார பிக் பாஸ் ப்ரோமோ உள்ளே!

சுருக்கம்

BiggBoss5Promo1 இமான் அண்ணாச்சி - தாமரை இடையேயான உறவு குறித்து பிரியங்கா கேள்வி கேட்க பதில் குறை தேவையில்லை என சிபி கூறுகிறார்.

பிக் பாஸ் சீசன் 5-ல் பிரியங்கா, தாமரை இடையே அடிக்கடி மோதல் வந்து கொண்டேதான் இருக்கிறது. முந்தைய எபிசோடுகளில் தாமரை வீட்டிலிருந்தாலும், நாட்டிலிருந்தாலும் பிரச்சனை என கூறியதாக குறிப்பிட்டு பிரியங்காவை நாமினேட் செய்த தாமரை, எப்போதும் தன்னுடைய குரல் தான் ஓங்கி இருக்க வேண்டும் என நினைப்பவர் பிரியங்கா நான் இதை ஏங்கவேனாலும் சொல்லுவேன் என அனைவர் முன்னிலையிலும் கூறியிருந்தார். இதனால் பிக் பாஸ் எபிசோட் செம பரபரப்பானது.

பின்னர் சமையல் டீமில் இருந்த தாமரை பிரியாணி செய்ய அதை சாப்பிட்ட பிரியங்கா, டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த தாமரைக்கு முத்தம் இட்டு பிரியாணி சூப்பர் என கூறுகிறார். இந்த காட்சி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. அதோடு நீ நல்லவளா? கெட்டவளா? என்னும் கேள்வியை தாமரைக்குள் எழுப்பியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய எபிசோட் முடிவில் பெட்ரூமில் படுத்திருக்கும் தாமரை அருகில் வரும் அக்ஷரா, நீ ஏன் பிரியங்காவை கட்டி பிடிக்கிற, உன்ன அவ எவ்ளோ அசிங்க படுத்தியிருக்கா என பிட்டு போட ஆரம்பிக்க, கடுப்பான தாமரை பாக்கி என அக்ஷராவை திட்டுகிறார். நானா அவள கட்டி பிடிக்கிறேன் மனம் நோகும் படி பேசிவிட்டு பிரியங்காவே தான் வந்து கட்டி பிடிக்கிறார். அவ ஏன் இப்படி நடந்துக்கிறானு புரிஞ்சுக்கவே முடியலைன்னு கூறுகிறார். விடாமல் மேலும் மேலும் பிரியங்கா குறித்து பேசி சூடேத்துகிறார் அக்சரா.

இதனால்பிரியங்கா மீது செம காண்டில் இருக்கிறார் தாமரை,. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவில் டாஸ்க் விளையாடும் போது பிரியங்கா அண்ணாச்சிக்கு உங்களுக்குமுள்ள உறவு குறித்து கூறுங்கள் என்கிறார். அண்ணாச்சி ஒரு புறம் கோபப்பட, மரு புறம் பிரியங்கா டீமில் இருக்கும் சிபி அந்த கேள்விக்கு பதில் கூற தேவையில்லை என தாமரையிடம் கூறுகிறார். உடனே அபிஷேக் குறுக்கிட்டு எழுதியதை கேட்கவிடு என கூற கடுப்பில் ஸ்கிரிப்டை கிழித்தெறிந்து கத்துகிறார் சிபி.  

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!