மாயாவி ரஜினிகாந்த் 2: காமெடிக்கும் தலைவர் ரஜினிதான்டா சூப்பர்ஸ்டாரு! தெறிக்க விடும் வடிவேலு

By Vishnu PriyaFirst Published Dec 12, 2019, 6:28 PM IST
Highlights

ரஜினியை அசால்ட் வில்லன்! என நிரூபித்த படம் ‘அவர்கள்’. குணசித்திர புலி! என நிரூபித்த படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி. அதன் பிறகு பைரவியில் துவங்கி பல படங்கள் அவரை ‘ஆக்‌ஷன் கிங்’ என அடையாளப்படுத்தின. 
 

ரஜினியை அசால்ட் வில்லன்! என நிரூபித்த படம் ‘அவர்கள்’. குணசித்திர புலி! என நிரூபித்த படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி. அதன் பிறகு பைரவியில் துவங்கி பல படங்கள் அவரை ‘ஆக்‌ஷன் கிங்’ என அடையாளப்படுத்தின. 

ஆனால் ரஜினிக்குள்ளே செமத்தியான ஒரு காமெடி சென்ஸ் இருக்கிறது. அந்த ஜானரிலும் அவரால் பின்னி எடுக்க முடியும்! என அந்த திறமையையும் அவரிடமிருந்து வெளியே கொண்டு வந்து காட்டியவர், அவரது குருநாதரான கே.பாலசந்தரேதான். 

இந்தியில் ஹிட்டடித்த ‘கோல்மால்’ படத்தை தமிழில் கமல்ஹாசனை வைத்து பண்ணுவதற்கான சூழல் வந்தது. இயக்கம் கே.பாலசந்தர். கே.பி.யின் மனமோ ரஜினியை நாடியது. உடனே ‘ஏன் சார் இப்படி விபரீதபரீட்சை? அவருக்கு ஸ்டைல், ஆக்‌ஷன் தானே சரியா இருக்கும்!’ என்றார்கள்  முக்கிய சினிமா புள்ளிகள். உடனே கே.பி.யோ ‘அவன் நிச்சயம் காமெடியில் வெளுத்துக் கட்டுவான். அந்த திறமை அவனுக்குள்ளே இருக்குது.’ என்றார். இப்படித்தான் தில்லுமுல்லு படம்  ஆரம்பானது. 

ஆக்‌ஷன் காட்சிகளில் ரஜினியின் கண்கள், கைகால்கள் மட்டும் பேசும். ஆனால் தில்லுமுல்லு படம் முழுவதும் ரஜினியின் டோட்டல் உடம்பும் பேசியது.  ஒரு நடிகன் தேர்ந்த நடிகனா என்பதை அவனது முகபாவனைகளை வைத்து தெளிவாய் கண்டுபிடித்திட முடியும். இந்தப் படத்தில் ரஜினி அதனை நிரூபித்தார். 

சோகமான காட்சிக்காக அழுது நடித்துவிட முடியும்! ஆனால், சிரிப்பு வர வைப்பதற்காக அழுது நடிப்பது மிக கஷ்டம். ஆனால்  இந்தப் படத்தில் தேங்காய் சீனிவாசனிடம் மாட்டிக்கொண்டு, தப்பிக்க பொய் சொல்லி ரஜினிகாந்த் அழுதுவடியும் காட்சிகள் தியேட்டரை அலற வைத்தன. இப்படி துவங்கியது ரஜினியின் மல்ட்டி டைனமிக் ஆக்டர்! எனும் பயணம். காமெடியிலும் ஜொலித்த பிறகுதான் அவர் கம்ப்ளீட் ஆக்டர் என கொண்டாடப்பட்டார். 

அதன் பிறகு ஏறக்குறைய தனது எல்லா படங்களிலுமே ரஜினி காமெடியும் பண்ணினார். தம்பிக்கு எந்த ஊரு ‘பாம்பு காமெடி’யில் உச்சம் தொட்டார் அண்ணன்.  மாஸ் ஆக்‌ஷன் சினிமாவிலும் கூட இடைவேளைக்கு முன்பு வரை ரஜினியின் காமெடிகள் இருக்கும். முரட்டுக் காளை, அன்புக்கு நான் அடிமை, நெற்றிக் கண், புதுக்கவிதை, தங்க மகன் என்று ஆரம்பித்து வேலைக்கரான், தர்மத்தின் தலைவன் என டிராவல் செய்து அண்ணாமலை, வீரா என உச்சம் தொட்டு, சந்திரமுகியிலெல்லாம் பின்னி எடுத்து, எந்திரனில் கூட சிட்டியாக காமெடியிலும் கலக்கி, ஆக்‌ஷனிலும் பின்னிப் பெடலெடுத்தார். 

தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகர்கள் அத்தனை பேருமே ரஜினியுடன் நடித்துவிட்டனர். அந்த காலத்து நாகேஷ், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், ஒய்.ஜி.மகேந்திரன், ஜனகராஜ், கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, கருணாஸ், சந்தானம் என துவங்கி இப்போது யோகிபாபு, சூரி வரை அவரோடு கைகோர்த்துவிட்டனர். 

சினிமாவுக்குள் நுழையும் முன் ரஜினியின் ஃபேவரைட் நடிகர் நாகேஷ்தான். ஆனால் சினிமாவில் உச்ச ஹீரோவாகி, ஆக்‌ஷன் அதகளம் பண்ணி, மாஸ் மன்னனாக இருந்தாலும் கூட காமெடியிலும் கலக்கும் ரஜினியின் ஆதர்ஷன் காமெடியனென்றால் அது வடிவேலுதான். 

வடிவேலுவின் சினிமா காமெடிகளை பார்த்து பார்த்து ரசிப்பேன் என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்.  சினிமா விழாக்களில் வடிவேலுவின் மேடைக்காமெடியை கூட மெய்மறந்து ரஜினி ரசிக்கும் வீடியோக்கள் இப்போதும் கூகுளில் சாட்சிகளாக இருக்கின்றன. 

நகைச்சுவை பேரரசன்! என்று பெயரெடுத்த வடிவேலுவே சிலிர்த்து, சிலாகித்து பேசும் நகைச்சுவை மன்னன் தான் ரஜினி. சந்திரமுகியில் இவர்கள் இருவரும் இணைந்து செய்த ‘பேய் பய’ சேட்டை காட்சிகள் அதிரிபுதிரியானவை. சந்திரமுகி பங்களாவினுள் இருவரும் தனியாக சென்று, ‘மாப்பூ! வெச்சுட்டான் டா ஆப்பூ’ எனும் டயலாக் பல வருடங்களாகியும் இன்னும் டிரெண்டிங்கில் இருக்கிறது. 

ரஜினியோடு சேர்ந்து காமெடி செய்வதை பற்றி ஒரு பேட்டியில் பேசிய வடிவேலு “அவரு கூட காமெடி ஸீன்ல நடிக்கிறப்ப ரொம்ப அலர்ட்டா இருக்கணும். அவரு தான் ஹீரோ, டூயட்டு, ஃபைட்டுன்னு பட்டையை கெளப்பிடுவாரு. ஆனால் காமெடி ஸீன்லேயும் ஹிட்டடிச்சுட்டு போயிடுவாரு. அப்புறம் காமெடியனான நமக்கு அந்த ஸீன்ல ஒரு வேளையும் இருக்காது. அப்பேர்ப்பட்ட தொழில்காரம்ணே அவரு!” என்று ரஜினியை சிலாகித்திருக்கிறார். 

ப்பார்றா!

click me!