விடாப்பிடியாய் இருந்த "இம்சை அரசன் 24 - ம் புலிகேசி" பிரச்சனை! அதிரடி முடிவால் அதிர வைத்த வடிவேலு!

Published : Dec 08, 2018, 02:57 PM IST
விடாப்பிடியாய் இருந்த "இம்சை அரசன் 24 - ம் புலிகேசி" பிரச்சனை! அதிரடி முடிவால் அதிர வைத்த வடிவேலு!

சுருக்கம்

விடாப்பிடியாக இழுபறியாய் இருந்த ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில், நடிகர் வடிவேலு அதிரடி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவை சற்றும் எதிர்ப்பார்க்காத படக்குழுவினர் சற்று அதிர்ந்து போய் உள்ளார்களாம்.

விடாப்பிடியாக இழுபறியாய் இருந்த ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில், நடிகர் வடிவேலு அதிரடி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவை சற்றும் எதிர்ப்பார்க்காத படக்குழுவினர் சற்று அதிர்ந்து போய் உள்ளார்களாம்.

வைகை புயல் வடிவேலு நடிப்பில், இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் கடந்த 2006  ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான வடிவேலுவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  வசூலிலும் சக்க போடு போட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாக பாகமாக 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' படம் பற்றிய பேச்சுகள் அடிப்பட்டு வந்த நிலையில்... இதனை படக்குழு கடந்த ஆண்டு உறுதி செய்தது. 

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு  சென்னைக்கு அருகே மிக பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இந்த தொடங்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய பண இழப்பு ஏற்பட்டது.

பாதியில் படம் நின்று போனதால், பல முறை இது குறித்து பேச வடிவேலுவிடம் முயற்சிகள் எடுத்தும் அது தோல்வியடைந்தது. இதனால் இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது படக்குழு. 

ஆனால், பலமுறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலுமே இல்லை. நீண்ட காலமாக இப்பிரச்சினை குறித்து விவாதித்து வந்தது தயாரிப்பாளர் சங்கம்.

இறுதியாக இயக்குநர்கள் சங்கம், பெப்சி, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஆகியோர் ஒன்றிணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். அதில் ‘வடிவேலு எந்தவித நிபந்தனையுமின்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டு முடித்துக்கொடுக்க வேண்டும் அல்லது இதுவரை செலவழிக்கப்பட்ட தொகை மற்றும் சம்பளத் தொகை அனைத்தும் சேர்த்து வட்டியுடன் அளிக்க வேண்டும்’ என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவால் வடிவேலு தரப்பினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த முடிவு குறித்து தயாரிப்பாளர் சங்கத்துக்குக் கடிதம் அனுப்பினார் வடிவேலு. ஆனால், தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி வந்ததால் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தின் பிரச்சினை முடியும் வரை, வேறு எந்தவொரு படத்தில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியது அறிவுறுத்தப்பட்டது.

இதனால் வடிவேலு நடிப்பதாக இருந்த படங்களில் அவரால் நடிக்க முடியவில்லை. இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் முதலில் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' பிரச்சினையை முடியுங்களேன் என்று கூறி வந்தனர்.

இந்நிலையில் தற்போது வடிவேலு  'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தில் நடிக்கிறேன் என்று படக்குழுவினருக்கு தனது ஆட்கள் மூலமாக தூது அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் விரைவில் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது வடிவேலு, இயக்குநர் சிம்புதேவன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட அனைவருமே உட்கார்ந்து பேசி நல்லமுடிவை எட்டுவார்கள் எனத் தெரிகிறது. இதனால், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படுவது உறுதியாகியுள்ளது. எப்படியோ விடாப்பிடியாக இழுத்து சென்ற இன்ற பிரச்னையை தன்னுடைய முடிவால் நல்ல விதமாக மாற்றியுள்ளார் வடிவேலு. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிரிஷை ஏன்டி கடத்த சொன்ன... விஜயாவை பொழந்துகட்டிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம சம்பவம்
நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!