கூலித் தொழிலாளியின் மகளை மருமகளாக்கிய பிரபல நடிகர்…. இவர்தான்யா மனுஷன் !!

Asianet News Tamil  
Published : Jan 04, 2018, 10:16 AM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
கூலித் தொழிலாளியின் மகளை மருமகளாக்கிய பிரபல நடிகர்…. இவர்தான்யா மனுஷன் !!

சுருக்கம்

vadivel son marriage in Madurai

தச்சுத் தொழில் செய்யும் ஒரு கூலித் தொழிலாளியின் மகளை பணம், அந்தஸ்து பாராமல், வரதட்சணை வாங்காமல் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்து அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளார் நடிகர் வடிவேலு.

தமிழ்த்திரையுலகில் அனைராலும் தவிர்க்கமுடியாக ஒருவர் நடிகர் வடிவேலு. அவரின் பெயரைக் கேட்டாலோ அல்லது அவரை திரையில் பார்த்தாலோ சிறு குழந்தை முதல் வயதான முதியவர்கள் வரை குபீரென சிரித்து விடுவார்கள்.

வடிவேலுவை நிகைத்தாலே  அனைவரின் மனதிலும் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். ஒருவர் குறித்து  மீம்ஸ் போட வேண்டுமென்றாலும், கிண்டல் செய்ய வேண்டுமானால் முதலில் ஞாபகத்துக்கு வருபவர் நடிகர்  வடிவேலுதான்.



வடிவேலுவின்  காமெடி வசனங்கள் கல்லூரிகளில் ட்ரெண்டிங்காக இருந்தது. சில ஆண்டுகளாக வடிவேலு  படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். செலக்டிவாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

ஆனால் தமிழ் தொலைக்காட்சிகள் வடிவேலுகை வைத்துதான் இன்றுவரை பிசினஸ் செய்து வருகிறார்கள். டி.வி.யில் எத்தனை முறை வடிவேலுவின்  காமெடி  காட்சிகள் போட்டாலும் அது சலிப்பதில்லை என்பதே உண்மை.

திரையில் அவர் எத்தனை காமெடி பண்ணினாலும், நிஜத்தில் அவர் ஒரு ஹீரோதான். அண்மையில் அவரது மகன் சுப்ரமணிக்கு மதுரையில் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது.

தனது மகனுக்கு நடிகர் வடிவேலு பார்த்த பெண், சிகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்தவர். பெண்ணின் தந்தை தச்சு வேலை செய்யும் ஒரு சாதாரண கூலித் தொழிலாளி. குடிசை வீட்டில் வசித்து வரும் அவரின் மகளை தனது மகனுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார் வடிவேலு.

அதுவும் எப்படி ? பணம், அந்தஸ்து பார்க்கவில்லை… ஒரு பைசாகூட வரதட்சணை வாங்கவில்லை… திருமண செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு ஓர் ஏழை பெண்ணை தனது மருமகளாக்கி கொண்டார் வடிவேலு

நடிகர் வடிவேலுவின் இந்த செயலை அவரது உறவினர்கள். ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வடிவேலு காமெடியால் நடந்த மெடிக்கல் மிராக்கிள்... கோமாவில் இருந்த சிறுமி மீண்டெழுந்த அதிசயம்..!
சன்னி தியோலின் 5 பணக்கார ஹீரோயின்கள்.! ஒருவரின் சொத்தில் 10 பார்டர் 2 எடுக்கலாம்.!