
'அவளும் பெண் தானே' படத்தில் 1974 ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை சுமித்ரா... இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட மொழி படங்களில் கதாநாயகியாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து கலக்கியுள்ளார்.
கோலிவுட் திரையுலகில் இவர் நடிக்க துவங்கிய நாள் முதல் இன்று வரை பல படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர். மேலும் ரஜினிகாந்துக்கு அம்மாவாக இவர் நடித்த பணக்காரன் படம் மிகவும் பிரபலமான ஒன்று. அதிலும் இந்த படத்தில் இவர் பாடகியாக நடித்திருப்பார் அதில் இவர் பாடும் 'நூறு வருஷம் இந்த மாப்ளையும் பொண்ணும் தான்... ' என்ற பாடல் இன்று வரை அனைத்து திருமணங்களிலும் ஒலிக்கப்படும் பலரது பேவரட் பாடல் எனலாம்.
எஸ். ஜானகி பாடிய இந்த பாடலை உண்மையில் இவர் பாடினால் எப்படி இருக்கும்... யோசிக்காதீங்க சுமித்ராவே 28 வருடத்திற்கு பின் இவர் நடித்த இந்த படத்தின் பாடலை பாடி ரசிகர்களை இம்ப்ரஸ் செய்துள்ளார் அந்த வீடியோ வெளியாகியுள்ளது...
எப்படி பாடுகிறார் என்பதை நீங்களே பாருங்கள்:
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.