வட சென்னை’ங்குற டைட்டில் தவிர எல்லாத்தையும் வெட்டுறவரைக்கும் விடமாட்டாங்க போல...

By vinoth kumarFirst Published Oct 26, 2018, 4:49 PM IST
Highlights

இக்கதையில் இடம்பெறும் சம்பவங்கள் யாவும் கற்பனையே என்று சொல்லும் சுதந்திரம் கூட, வரவர இயக்குநர்களுக்கு, குறிப்பாக தேசிய விருது பெற்ற வெற்றிமாறன் போன்ற இயக்குநர்களுக்கே இல்லாமல் போனதே கொடுமைதான்.

இக்கதையில் இடம்பெறும் சம்பவங்கள் யாவும் கற்பனையே என்று சொல்லும் சுதந்திரம் கூட, வரவர இயக்குநர்களுக்கு, குறிப்பாக தேசிய விருது பெற்ற வெற்றிமாறன் போன்ற இயக்குநர்களுக்கே இல்லாமல் போனதே கொடுமைதான். 

முற்றிலும் கற்பனைப்பாத்திரங்களால் உருவாக்கப்பட்ட வெற்றிமாறனின் வடசென்னை’ படம் ரிலீஸான தினத்திலிருந்தே பல்வேறு அமைப்பினரிடமிருந்து விதவிதமான தொல்லைகளை சந்தித்து வருகிறது. அவ்வாறு போராடுபவர்களில் பலர் இதுவரை கேள்விப்படாத லெட்டர்பேடு கட்சியினர். அந்தப்போராட்டங்களின் வழியாக ‘கெட்ட வார்த்தைகளை படத்திலிருந்து நீக்குவது தாண்டி அவர்களிடம் ஏதோ ஒரு கெட்ட எண்ணம் இருப்பதை உணரவே முடிகிறது. 

இதன் தொல்லையர்களின் இம்சை தாங்காமல் வெற்றிமாறனும் தொடர்ச்சியாக படத்தின் பல கனமான பகுதிகளை கனத்த இதயத்துடன் வெட்டி எறிந்துகொண்டேதான் வருகிறார். ஆனாலும் திருப்தி அடையாத மீனவர் அமைப்பினர்களுள் ஒரு பிரிவினர் இன்று சாஸ்திரி பவனில் உள்ள சென்சார் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மீனவர் சம்பந்தப்பட்ட ஒரு காட்சி கூட ‘வடசென்னை’ படத்தில் இடம்பெறக்கூடாது என்று ரகளையில் ஈடுபட்டனர்.

அவர்களைக் கலைக்க பெருமளவில் போலீஸ் குவிக்கப்பட்டபோதும், ‘தியேட்டர்களிலிருந்து படங்களை தூக்கினால்தான் இங்கிருந்து நகர்வோம்’ என்று ஒரு பிரிவினர் பிடிவாதம் பிடித்தனர். போகிற போக்கைப்பார்த்தால் ‘வட சென்னை’ என்கிற டைட்டில் கார்டையும் நன்றி கார்டையும் தவிர மீதி எல்லாத்தையும் தூக்கச்சொல்வாங்க போல.

click me!