
உதயநிதி நடிப்பில் அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் படம் சரவணன் இருக்க பயமேன். இப்படத்தை இயக்குனர் எழில் இயக்க, ரெஜினா , சூரி , ஸ்ருஸ்தி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தை பற்றியும் ரெஜினாவுடன் நடித்தது பற்றியும் ஒரு பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில் .
இப்படம் குடும்பத்துடன் ஒரு ஜாலி டூர் சென்று வந்த அனுபவம் கொடுக்கும் என்றும் ரெஜினா ஒரு நல்ல நடிகை , படத்தில் அவருக்கு கோபப்படும் கதாபாத்திரம் , ஆனால் நிஜத்தில் கோபப்படவே மாட்டார் என்றும் கூறினார்.
எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் 6பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை இவர் தான், காரணம் எப்போதும் உடல் பயிற்சிகள் பற்றி பேசிக்கொண்டும் , ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடல் பயிற்சி செய்வார் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.