மணமேடையில் நடிகையிடம் மிக மட்டமாக நடந்துகொண்ட அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தயாரிப்பாளர்...

Published : Apr 06, 2019, 09:09 AM IST
மணமேடையில் நடிகையிடம் மிக மட்டமாக நடந்துகொண்ட அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தயாரிப்பாளர்...

சுருக்கம்

”பட வாய்ப்புகளுக்காக நான் போனி கபூரை ஆதரித்துப் பேசவில்லை. அவர் என் பின்பகுதியில் தட்டியது தற்செயலானதுதான். அதில் எந்த கெட்ட நோக்கமும் இல்லை” என்கிறார் இந்தி நடிகை ஊர்வசி ரவ்தெலா.  

”பட வாய்ப்புகளுக்காக நான் போனி கபூரை ஆதரித்துப் பேசவில்லை. அவர் என் பின்பகுதியில் தட்டியது தற்செயலானதுதான். அதில் எந்த கெட்ட நோக்கமும் இல்லை” என்கிறார் இந்தி நடிகை ஊர்வசி ரவ்தெலா.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத் தயாரிப்பாளருமான போனிகபூர், இந்தி நடிகை ஊர்வசி ரவ்தெலா மற்றும் நடிகர்கள் பலர் மும்பையில் கடந்த வாரம்  நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது ஊர்வசி ரவ்தெலாவின் பின்பகுதியில் போனிகபூர் கையால் தட்டினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

அந்த வீடியோவை பார்த்தவர்கள், ஒரு பொதுமேடையில்  மகள் வயது பெண்ணை இப்படி செய்யலாமா என்று போனிகபூரை விளாசினார்கள். பின்னால் தட்டியதும் ஊர்வசி ரவ்தெலா முகம் மாறிவிட்டது. இப்படி கேவலமாக போனிகபூர் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என்று சிலர் பதிவிட்டனர். திரையுலகில் மூத்தவரான போனிகபூர் இப்படி நடந்து கொள்ளலாமா, சினிமா துறையில் இதெல்லாம் சகஜம்தானா என்றும் சிலர் கேள்வி எழுப்பினர். 

இச்செய்தியும் போனி கபூர் பின் பக்கம் தட்டிய வீடியோவும் வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து  ஊர்வசி ரவ்தெலா டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். ‘‘சமூக வலைத்தளங்களில் நானும் போனிகபூரும் இருக்கும் வீடியோவை வைத்து கேலி செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஜென்டில்மேன். சமூக வலைத்தளங்களில் யோசிக்காமல் கேலி செய்வது வருத்தம் அளிக்கிறது. இப்படி செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள். நான் போனிகபூர் மீது மரியாதை வைத்து இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அதற்கு பதிலடியாக போனி கபூர் தட்டியபோது ஊர்வசி அளித்த ரியாக்‌ஷனை வெளியிட்டு பட சான்ஸுக்காக இப்பிடியாம்மா பல்டி அடிப்பாங்க என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சரத்குமார் உடனான காதல் முறிவுக்கு பின்... திருமணமே செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழும் நடிகை..!
அடேய் விடுங்கடா... கூட்டத்தில் சிக்கிய அனிருத்; அலேக்காக தூக்கிச்சென்ற பவுன்சர்கள் - வைரல் வீடியோ