
தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருந்த, 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஆண்டு பொங்கல் திருவிழாவின் போது 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் வெளியானது. வெளியான இரண்டே நாட்களில், சுமார் 200 கோடி வசூலித்து சாதனையை படைத்தது. பின்னர் பிரபல ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக செம்ம ஸ்டைலிஷ் வாத்தியாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார் விஜய். இவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மேலும் முரட்டு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி தளபதிக்கு செம்ம டஃப் கொடுத்தார். எனவே விஜய்யின் நடிப்பை விட, விஜய் சேதுபதியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எப்போது 'பவானியை' மையமாக வைத்து ஒரு படத்தை எடுப்பீர்கள் என்கிற கேள்விகளும் ரசிகர்களால் கேட்டகப்பட்டது. மேலும் தளபதி ரசிகர்களே... லோகேஷ் கனகராஜுக்கு இதுகுறித்து கோரிக்கை வைத்தனர்.
மேலும் விஜய் டிவி தீனா, கௌரி கிஷன், ஆண்ட்ரியா, ரம்யா, சாந்தனு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது. 'மாஸ்டர்' படத்தில் இருந்து வெளியான குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங், வாத்தி ரைடு என அனைத்து பாடல்களும், ரசிகர்களை கவர்ந்து அடுத்தடுத்த சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடலுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரவருக்கு பிடித்த வர்ஷனில் டான்ஸ் ஆடி வெளியிட்டு லைக்குகளை அள்ளினர்.
இது ஒரு புறம் இருக்க, வாத்தி கம்மிங் பாடல், 250 மில்லியன் ரசிகர்களால், யூடியூபில் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் வாத்தி கம்மிங் பாடலுக்காக நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர், தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூவரும் ஆலோசனை செய்யும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.