
சென்னை : நடிகர் தனுஷ் - நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள இட்லிக்கடை படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக புதிய தகவல் ஒன்று சோஷியல் மீடியாக்களில் தீயாய் பரவி வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்களும் சொல்லப்பட்டு வருகிறது.
ராயன் படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து வரும் இட்லிக்கடை. இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் மூவிஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்த படம் ஏப்ரல் 10 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிலும் படத்தின் எக்ஸிக்யூடிவ் டைரக்டர் பேசுகையில், ஏற்கனவே அறிவித்த படி தனுஷின் இட்லிக்கடை ஏப்ரல் 10ம் தேதிக்கு ரிலீசாக என்பதை தெரிவித்துக் கொள்வதாக பட ரிலீசை உறுதி செய்தார். படக்குழுவினரும் ஏப்ரல் 10ம் தேதிக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கே திட்டமிட்டுள்ளனர்.
இட்லிக்கடை ரிலீஸ் தள்ளி போகிறதா?
ஆனால் சோஷியல் மீடியாக்களில் நேற்று முதல் பரவி வரும் புதிய தகவலின் படி, தனுஷின் இட்லிக்கடை படத்தை ஏப்ரல் 10ம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. தனுஷ் தற்போது மற்ற படங்களின் ஷூட்டிங் வேலைகளில் பிஸியாக இருப்பதால் ஏப்ரல் மாதத்திற்குள் மீதமிருக்கும் காட்சிகளை எடுத்து முடிக்க முடியுமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் தான் படத்தின் ரிலீசை தள்ளி வைக்கலாமா என யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. மற்ற படங்களின் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் தான் இட்லிக்கடை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட தனுஷ் வரவில்லை என்பதை படக்குழு ஏற்கனவே தெரிவித்து விட்டது. இதனால் இட்லிக்கடை ரிலீஸ் தள்ளிப் போவதும் உண்மை தானோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
படுபிஸியாக இருக்கும் தனுஷ் :
இட்லிக்கடை பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் அருண் விஜய், "ராயன் படத்திற்கு பிறகு தனுஷூடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அது இட்லிக்கடை படத்தில் நடந்துள்ளது. நேற்று இரவு கூட நானும் தனுஷூம் ஷூட்டிங்கில் கலந்து கொண்டோம். தன்னுடைய ஷாட் முடிந்ததுமே தனுஷ், தன்னுடைய அடுத்த படத்திற்கான கதை எழுதும் வேலைகளில் மும்முரமாகி விட்டார்" என்றார். தனுஷ் தற்போது பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.
இட்லிக்கடை படம் தனுஷ் இயக்கி நடிக்கும் நான்காவது படமாகும். இதைத் தொடர்ந்து குபேரா என்ற படத்திலும் நடிக்க கமிட்டாகி உள்ளார். இதில் இவருடன் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். அதைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் தனுஷ் நடிக்கிறாராம். இதற்கிடையில் தானே இயக்கியும் அடுத்தடுத்த படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார். இட்லிக்கடை படத்தின் வேலைகள் ஏற்கனவே பாதி நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் தான் அருண் விஜய், தனுஷ் இருக்கும் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
இட்லிக்கடை ரிலீஸ் தள்ளிவைப்பிற்கு இது தான் காரணமோ?
இட்லிக்கடை படத்தின் ரிலீஸ் தள்ளி போவதாக இதுவரை படக்குழுவினரோ அல்லது தனுஷோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதி செய்யவில்லை. இருந்தாலும் இப்படி ஒரு தகவல் பரவி வருகிறது. இதற்கிடையில், அஜித் நடித்து வரும் "குட் பேட் அக்லி" படமும் ஏப்ரல் 10ம் தேதி தான் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் படத்துடன் தன்னுடைய படம் மோதிக் கொள்வதை தனுஷ் விரும்பாததால் தான் இட்லிக்கடை படத்தின் ரிலீசை தள்ளி வைக்க படக்குழு ஆலோசித்து வருவதாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது. விரைவில் படக்குழு தரப்பில் இருந்கது இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.