கோபி - சுதாகர் நடிக்கும் படத்திற்கு வித்தியாசமான டைட்டில்!

Published : Feb 11, 2025, 05:02 PM ISTUpdated : Feb 11, 2025, 08:56 PM IST
கோபி - சுதாகர் நடிக்கும் படத்திற்கு வித்தியாசமான டைட்டில்!

சுருக்கம்

பரிதாபங்கள் வீடியோக்கள் மூலம் பிரபலமான கோபி மற்றும் சுதாகர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் வெளியானது.  

பரிதாபங்கள் யூடியூப் மூலம் மிகவும் பிரபலமானவர்கள் தான் சுதாகர் - கோபி. இவர்களின் பரிதாபங்கள் கான்செப்ட் வீடியோக்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில்  இவர் பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், இருவரும் தயாரித்து நடித்துள்ள படத்தின் டைட்டில் தற்போது ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியாகி உள்ளது.

கோபி - சுதாகர் நடிக்கும் இந்த படம், கமர்ஷியல் ஃபேண்டஸி, ஃபேமிலி என்டர்டெயினர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு “ஓ காட் பியூட்டிஃபுல்”என பெயரிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுளள்து. 
 வழக்கமான கமர்ஷியல் படங்களை போல் இல்லாமல், ஒரு நடுத்தர குடும்ப பின்னணியில் அவர்களின் அன்றாட வாழ்க்கையில், நிகழும் பிரச்சனைகளை கொண்டே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

அணைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்து பார்க்க கூடிய ஒரு படமாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் டைட்டில் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. பரிதாபங்கள் புகழ் கோபி - சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க,.  இவர்களுடன் VTV கணேஷ், வின்சு சாம், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம், பிரசன்னா, யுவராஜ் கணேசன், ஹரிதா, கௌதம், பாலகுமாரன், குகன், சாத்விக், ஆழியா, பெனடிக்ட் & பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ரஜினிகாந்துக்கு 10 நிமிடத்தில் தேவா போட்ட சூப்பர் ஹிட் பாட்டு! எது தெரியுமா?

இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில்  படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரோடக்சன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் டீசர் கூடிய விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு சக்திவேல், K B ஶ்ரீ கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, அருண் கௌதம்என்பவர் இசையமைத்துள்ளார். சாம் Rdx  இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்