அச்சச்சோ தல அஜீத்துக்கு அடி பட்டிடுச்சா? விசுவாசம் பட ஷூட்டிங்கின் போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்

Asianet News Tamil  
Published : May 22, 2018, 04:42 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
அச்சச்சோ தல அஜீத்துக்கு அடி பட்டிடுச்சா? விசுவாசம் பட ஷூட்டிங்கின் போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்

சுருக்கம்

ultimate star got injured at shooting spot

அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், தற்போது தயாராகி வரும் புதிய திரைப்படம் விசுவாசம். விவேகம் திரைப்படத்தை தொடர்ந்து, அஜீத் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம், விசுவாசம்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றுவருகிறது. இதனிடையே விசுவாசம் படப்பிடிப்பின் போது நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவம், இப்போது வெளியாகியிருக்கிறது.

விசுவாசம் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது அஜீத்தின் காலில் அடிபட்டுவிட்டதாம். அதனால் அவர் வலியில் கஷ்டப்பட்டிருக்கிறார். இதனை பார்த்த படக்குழுவினர் அவரிடம் ஷூட்டிங்கை வேண்டுமானால் இன்னொரு நாள் வைத்துக்கொள்ளலாம்  என கூறியிருக்கின்றனர்.

ஆனால் அஜீத் வேண்டாம் எனக்கூறி மறுத்துவிட்டு, ஷூட்டிங் நல்ல முறையில் நடைபெற வேண்டும். என கூறி வலியுடன் நடித்தாராம். இதனை பார்த்து படக்குழுவினர் அஜீத்தின் பொறுப்புணர்வை நினைத்து வியந்திருக்கின்றனர்.

விசுவாசம் திரைப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும். என்ற எண்ணத்துடன் வேகமாக தயாரித்து வருகிறது விசுவாசம் படக்குழு.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரெளடித்தனத்தை ஆரம்பித்த கதிர்; நடுத்தெருவுக்கு வந்த ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Anikha Surendran : சேலையில் காந்தப் பார்வையால் மயக்கும் குட்டி நயன் 'அனிகா' சுரேந்திரன்.. குவியும் லைக்ஸ்