உலக நாயகன் கமலஹாசன் வெளியிட்ட "கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தின் ஃபர்ஸ் லுக் !!

Published : Mar 06, 2023, 03:44 PM IST
 உலக நாயகன் கமலஹாசன் வெளியிட்ட "கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தின் ஃபர்ஸ் லுக் !!

சுருக்கம்

தேசிய விருது பிரபலமான தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருமேகங்கள் கலைக்கின்றன', படத்தின் முதல் தோற்றத்தை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.   

தமிழ் திரையுலகில் மாறுபட்ட வாழ்வியல் படைப்புகளால், மக்கள் மனங்களை வென்ற  இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில்,  நீண்ட இடைவேளைக்கு பிறகு மனித வாழ்வியலை சொல்லும் அழுத்தமாக படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "கருமேகங்கள் கலைகின்றன”. பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன்,  அதிதி பாலன், யோகிபாபு முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் முதல் தோற்றத்தை உலக நாயகன் கமலஹாசன் இன்று வெளியிட்டார். 


உலக நாயகன் கமலஹாசன் அவரது அலுவலகத்தில் இன்று இப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டார். அப்போது பாரதிராஜா, இயக்குநர் தங்கர்பச்சான் , தயாரிப்பாளர் டி. துரை வீரசக்தி ஆகியோர் உடனிருந்தனர். பாரதிராஜா இப்படம் தமிழ் திரை வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாக இருக்குமென்று கமல்ஹாசனிடம் கூறினார். 

சிகிச்சைக்கு பணமில்லாமல் பரிதாப நிலையில் 'பிதாமகன்' பட தயாரிப்பாளர்! ஓடி வந்து உதவிய நடிகர் சூர்யா!

படம் குறித்து நடிகர் கமலஹாசன் இயக்குநர் தங்கர் பச்சானிடம் கூறுகையில்…  தமிழ் சினிமாவின் பெருமை மிகு படைப்பாளி பாரதிராஜா ஒரு படைப்பை இந்த அளவு புகழ்ந்து பார்த்ததில்லை. இப்படத்தில் நடித்த பிறகு தான் ஓய்வுபெற்று விடலாம் என்று சொல்லும் அளவுக்கு அவர் கூறியது எனக்கு பேராச்சர்யம். இப்பொழுதே உடனடியாக படம் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது. விரைவில் படத்தை காட்டுங்கள் என்றார். மேலும் , இயக்குநர் தங்கர் பச்சானுக்கும், தயாரிப்பாளர் டி. துரை வீரசக்திகும் மற்றும் படக்குழுவினருக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். 

மண்சார்ந்த மென்மையான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்றம் இணையம் முழுக்க பெரும் வரவேற்பை குவித்து வருகிறது.  படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் படத்தின் பின்னணி இசை பணிகளை செய்கிறார் .  விரைவில் படத்தின் டீசர் வெளிவருமென தயாரிப்பு குழு அறிவித்துள்ளது.   

செல்ல மகனுடன் நீச்சல் குளத்தில்.. குழந்தையாக மாறி ஆட்டம் போடும் காஜல் அகர்வால்..! வைரலாகும் வீடியோ..!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!