சுதந்திர தினத்தில் Youtubeல் வெளியான ஹே ராம்.. "படைத்த புதிய சாதனை" - 23 ஆண்டுகள் கழித்தும் மவுசு குறையவில்லை!

By Ansgar R  |  First Published Aug 28, 2023, 9:07 AM IST

சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பாக கடந்த 2000மாவது ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் வெளியான திரைப்படம் தான் ஹே ராம். இந்த திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்து வெளியிட்டு மாபெரும் வெற்றி கண்டவர் உலக நாயகன் கமலஹாசன்.


தான் இயக்கி நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதோ ஒரு வித்தியாசத்தை கொடுக்கும் வல்லமை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களிடம் உள்ளது. இந்திய திரை உலகம் மட்டுமல்லாமல், உலக திரை வரலாற்றிலேயே திரை திரையில் உள்ள அத்தனை துறைகளிலும் பணியாற்றிய ஒரு மாபெரும் கலைஞன் அவர். 

இவர் இயக்கத்தில் வெளியான ஹே ராம் என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறியது. இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பல பாலிவுட் நடிகர்கள் நடித்திருந்தனர் குறிப்பாக ஷாருக்கான், ஹேமா மாலினி, ராணி முகர்ஜி, நசிருதின் சா, ஓம் பூரி மற்றும் தமிழ் நடிகர்கள் நாசர், டெல்லி கணேஷ் மற்றும் அப்பாஸ் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

"உலக நாயகனை அறிமுகம் செய்த தயாரிப்பாளர் வீரப்பன்" - உடல் நலக்குறைவால் காலமானார் - மனம் நொந்து கமல் போட்ட பதிவு

பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக் மற்றும் நடிகை சரண்யா பொன்வண்ணன் ஆகிய இருவரும் இந்த திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் படத்தின் நீளம் கருதி அவர்களுடைய காட்சிகள் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டதும் உண்மைதான். 

சுமார் 23 ஆண்டுகளாக இன்றளவும் புகழ்பெற்று விளங்கும் இந்த திரைப்படத்தை கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் 77 வது சுதந்திர தினத்தன்று யூட்யூபில் வெளியிட்டு மக்களை பெரும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் இந்த படத்தின் இயக்குனரும் நடிகருமான உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள். 

Today on our country's Independence Day, my ode to Bapu. ➡️ https://t.co/O8xh3nshOs

pic.twitter.com/0yI8DiKmzI

— Kamal Haasan (@ikamalhaasan)

தற்பொழுது இந்த திரைப்படம் youtube தளத்தில் அனைவரது பார்வைக்கு விருந்தாகி உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் yotubeல் வெளியாகி சுமார் 13 நாட்கள் ஆகி உள்ள நிலையில், ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. 

படம் வெளியாகிய 23 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றாலும் இன்றளவும் பல இயக்குனர்கள் பேச தயங்கும் பல விஷயங்களை தைரியமாக இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் பேசியிருப்பார். மேலும் ஷாருகான் நேரடியாக நடித்த முதல் தமிழ் திரைப்படம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

கவனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி... நெல்சன் முதல் சிவகார்த்திகேயன் வரை படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்

click me!