'காவாலா' பாடலுக்கு உகாண்டா நாட்டு சிறுவர்கள் போட்ட மாஸ் குத்தாட்டம்! இதை ஷேர் செய்தது யார் தெரியுமா?

By manimegalai a  |  First Published Aug 24, 2023, 1:03 AM IST

ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற 'காவாலா' பாடல் நாடு கடந்து ரசிக்கப்படும் பாடலாக மாறியுள்ளது. தற்போது உகாண்டா நாட்டு சிறுவர்கள், இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
 


கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி, வசூலில் 600 கோடியை நெருங்கி வருகிறது ஜெயிலர் திரைப்படம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வெறித்தனமான கம் பேக் படமாக ஜெயிலர் அமைந்துள்ளது மட்டும் இன்றி, கடந்த முறை தவறவிட்ட தோல்வியை, 'ஜெயிலர்' படத்தின் மூலம் ஈடு செய்து, தனக்கான வெற்றியை தக்க வைத்து கொண்டுள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப் குமார்.

மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாகவே, இந்த படத்தில் இருந்து வெளியான சில பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, குறிப்பாக பிரபல நடிகை தமன்னாவின் வசீகரமான நடனத்தில் வெளியான காவாலா பாடல் உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை பல இடங்களில் சூப்பர் ஹிட் ஆனது. 

Tap to resize

Latest Videos

49 வயதில் மிட்நைட் மேட்னஸ் போஸ் கொடுத்த கஸ்தூரி! என்ன மேடம் நைட் ரொம்ப மூடா? தெறிக்க விட்ட நெட்டிசன்ஸ்!

அண்மையில் இந்தியாவின் ஜப்பான் நாட்டு தூதர் ஹிரோஷி சுசுகி என்பவர் காவாலா  பாடலுக்கு நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் இந்த பாடல் வெகுவாக கவர்ந்த நிலையில்,  ஜெயிலர் படத்தின் 'காவாலா' பாடலுக்கு, உகாண்டா நாட்டை சேர்ந்த சிறுவர்கள் நடனமாடிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த சிறுவர்களின் நடனத்தை யார் ஷேர் செய்துள்ளார் தெரியுமா?  ஸ்பெயினை சேர்ந்த பிரபல கால்பந்து க்ளப் FC Barcelona தான். இதற்க்கு அந்த சிறுவர்கள், இதை எங்களால் நம்ப முடியவில்லை; எங்கள் கனவு நனவானது என, தங்களது இன்ஸ்டா பக்கத்தில் FC Barcelona-வுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

storm🌪️ taken over at .pic.twitter.com/MS6KK72sXS

|| | | | ||

— Manobala Vijayabalan (@ManobalaV)

 

click me!