
உதயநிதி தன்னுடைய தந்தையை தொடர்ந்து, அரசியல் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்திற்க்காக, அட்மின் மீது பழி போட மாட்டேன் தவறு என்னுடையது என மன்னிப்பு கேட்டுள்ளது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
உதயநிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கண்ணே கலைமானே' கலவையான விமர்சனங்களை பெற்று, திரையரங்கங்களில் ஓடி கொண்டிருக்கிறது. மேலும் சினிமாவை தவிர அரசியலிலும் தன்னுடைய தந்தையுடன் இணைத்து செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் அவ்வப்போது நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை தாக்குவது போல் கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் உதயநிதி நேற்று, தனது சமூக வலைத்தளத்தில் கமல், ரஜினி இருவரும் ஜெயலலிதாவுக்காக உண்ணாவிரதம் இருந்ததாக ஒரு புகைப்படத்தை பதிவு செய்தார். உண்மையில் அந்த புகைப்படம் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ரஜினி, கமல் உள்பட நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்தது போது எடுக்கப்பட்டது.
ஆனால் யாரோ ஒருவர், அந்த புகைப்படம் ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது அவரை விடுதலை செய்ய உண்ணாவிரதம் இருந்தது போது எடுத்தது என போட்டோஷாப் செய்து வெளியிட, அதனை நம்பி உதயநிதியும் அந்த புகைப்படத்தை உண்மை என நினைத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.
ஆனால் சில நிமிடங்களில் ரஜினி - கமல் புகைப்படம் அப்போது எடுக்கப்பட்டது இல்லை என்கிற உண்மையை தெரிந்ததும் புகைப்படத்தை நீக்கியதோடு, முதல்முறையாக உறுதி செய்யாமல் ரஜினி - கமல் விஷயத்தில் தவறு செய்துவிட்டேன். இது என்னுடைய தவறுதான். தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கிறேன். என் அட்மின் மீது பழிபோட மாட்டேன்' என்று கூறினார்.
இவரின் இப்படி மன்னிப்பு கேட்டுள்ளது அனைவருடைய பாராட்டுகளையும் பெற்று வந்தாலும், இந்த அட்மின் மீது பழி போட மாட்டேன் என கூறியுள்ளது, யாரையோ கிண்டலடிப்பது போல் உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.