
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இதன் கட்டுமான பணிகள் இன்னும் முடிந்தபாடில்லை. இதற்கு காரணம் நிதி பற்றாக்குறை தான். இதற்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தற்போது நடிகர் சங்க தலைவராக நாசர் செயல்பட்டு வருகிறார். பொருளாளராக கார்த்தியும், பொதுச்செயலாளராக விஷாலும் பதவி வகித்து வருகின்றனர்,
நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன் என்கிற முடிவோடு இருக்கிறார் விஷால். தற்போது கட்டிட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அதை முடிக்க தேவையான நிதியை வங்கியில் கடனாக வாங்க உள்ளதாக ஏற்கனவே நடிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... Abishek Raja: பிக்பாஸ் அபிஷேக் ராஜா இயக்குனராக அவதாரம் எடுக்கும் 'ஜாம் ஜாம்'! போஸ்டருடன் வெளியான அறிவிப்பு!
அவர் நடிகர் சங்க கட்டிடத்துக்காக ரூ.1 கோடி நிதி உதவி வழங்கி இருக்கிறார். சென்னையில் உதயநிதியை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் கார்த்தி, விஷால், நாசர், கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் அவரிடம் இருந்து ரூ.1 கோடிக்கான காசோலையை பெற்றுக்கொண்டனர். நடிகர் சங்க பொருளாளரான கார்த்தியிடம் அந்த காசோலையை ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலின் செய்த பேருதவியால் நெகிழ்ந்து போன நடிகர் விஷால், அவருக்கு நன்றி தெரிவித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அன்புள்ள உதயா, ஒரு நண்பனாக, நடிகராக, தயாரிப்பாளராக, அமைச்சராக நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க நீ எந்த வகையிலும் உதவ தயாராக இருக்கிறாய். மிக்க நன்றி என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... வெற்றியும் இல்ல.. கார்த்தியும் இல்ல.. தளபதி 69 படத்தை இயக்கப்போவது வேற ஒரு இயக்குனராம் - தினம் ஒரு தகவல்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.