
பிரபல காமெடி நடிகரான ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா, பிகில், விருமன் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்... அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு, டாஸ்குகளில் தாக்கு பிடிக்க முடியாமல் சில வாரங்களிலேயே டார்கெட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்திரஜா கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கலந்து கொள்ளவில்லை. மேலும் கடந்த ஆண்டு தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த உடனேயே... தாய் மாமாவான கார்த்திக்கை காதலிக்கும் விஷயத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்தார். இவர்கள் இருவரின் காதலுக்கு, பெற்றோரும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த மாதம் மிக பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.
இதை தொடர்ந்து, கூடிய விரைவில் இவர்களின் திருமணம் சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளில் ரோபோ ஷங்கர் மற்றும் அவரின் மனைவி தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க... நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், இந்த நாளில்... மிகவும் ரொமான்டிக்கான நினைவுகளை ஒரு வீடியோவாக தொகுத்து, இந்திரஜா வெளியிட்டுளளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இருவரும் அவுட்டிங் செல்லும் போது... ஒரே நிற உடையில் உள்ளதால் இவர்கள் இருவர் இடையிலும் கெமிஸ்ட்ரி செம்மையாக உள்ளது என்றும்... கியூட் ஜோடி என ரசிகர்கள் தாறுமாறாக புகழ்ந்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.