Udhayanidhi: மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உதயநிதி..!

Published : Nov 09, 2021, 06:26 PM IST
Udhayanidhi: மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உதயநிதி..!

சுருக்கம்

மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் (Puneeth Rajkumar) சமாதியில், நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.  

மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் சமாதியில், நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

கன்னட திரை உலகின் பவர் ஸ்டார், நடிகர் புனீத் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். 46 வயதில் புனீத் ராஜ்குமார் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவருடைய மறைவுக்கு இந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். இவரது உடல் கடந்த 31-ஆம் தேதி அரசு முழு மரியாதையுடன் பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவருடைய பெற்றோர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்: Samantha: நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்... மனவேதனையை 7 வழிகளில் சமாளிக்கும் சமந்தா!!

 

பொதுவாக ஒரு நடிகரின் மறைவு என்றால், அதனை ரசிகர்கள்  ஓரிரு நாட்களில் மறந்து விடுவது வழக்கம். ஆனால் புனீத் ராஜ்குமாரின் மறைவை அவரது ரசிகர்களாலும், திரையுலகினராலும் அப்படி கடந்து செல்ல முடியவில்லை என்பதே உண்மை. வெளிநாடுகளில் இருந்து கூட வந்து பல ரசிகர்கள் இவருடைய சமாதியில் அஞ்சலி செலுத்தி செல்வதாக கூறப்படுகிறது. குறைத்த பட்சம் ஒரு நாளைக்கு 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் ரசிகர்கள் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்: Poonam Pandey: கொடூரமான காயங்களுடன் பிரபல கவர்ச்சி நடிகை மருத்துவமனையில் அனுமதி!! கணவர் அதிரடி கைது!!

 

மேலும் அவரது உடலுக்கு நேரடியாக சென்று அஞ்சலி செலுத்த முடியாத  பிரபலங்கள் பலரும்... அவரது சமாதிக்கு படையெடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம், நடிகர் சூர்யா புனீத் ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, கண்ணீருடன் அவருடைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட நிலையில், தற்போது பிரபல நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் புனீத் ராஜ்குமார் சமாதிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இவருடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் புனீத் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!