
ராணுவ டாக்டராக சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் அண்மையில் வெளியாகி மிதமான வரவேற்பினை பெற்றது. நெல்சன் இயக்கி இருந்த இந்த படத்தில் ப்ரியா மோகன், வினை ராய், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். காமெடி ஆக்சன் படமாக உருவாகிய இந்த படத்தின் பாடல்கள் அனைத்து ஹிட் அடித்திருந்தது. அனிருத் இசையில் உருவான செல்லம்மா பாடலை சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார்.
பெண் குழந்தை கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் படக்குழு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றே சொல்லலாம். இதை தொடர்ந்து தற்போது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் 'டான்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையில் உருவாக்கி வரும் இந்த படத்திற்கான டப்பிங் வேலைகள் முடிவடைந்துள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
கன மழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் நீருக்குள் மூழ்கியுள்ளது. படப்பிடிப்பு தளங்களை நீர் சூழ்ந்துள்ளதால் பிரபலங்களில் படப்பிடிப்புகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை முழுவதும் சம்பித்துள்ள நிலையில் போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. அவசியத்திற்கு கூட வெளியில் போக இயலாத நிலையில் சென்னை வாசிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் "டான்" படத்திற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து அடமழையிலும் விடாமல் டான் டப்பிங் நடைபெற்று முடிந்துள்ளதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் இன்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.