டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி விவகாரத்து கேட்டு மனு … அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

 
Published : Dec 20, 2017, 09:50 AM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி விவகாரத்து கேட்டு மனு … அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

சுருக்கம்

TV anchor Divyadarshini applied for divorse

விஜய் தொலைக்காட்சியின்  தொகுப்பாளினி டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தனது கணவரிடம் இருந்த விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

விஜய்  தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி.

நம்ம வீட்டு கல்யாணம்,  காஃபி வித் டிடி  போன்ற நிகழ்சிகளை சுவாராஸ்யமாக தொகுத்து வழங்கினார். குறும்புத்தனமான டிடியின் பேச்சுக்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த 2104 ஆம் ஆண்டு டிடிக்கும் அவரின் நெருங்கிய நண்பர் ஸ்ரீகாந்த ரவிச்சந்திரனுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

தற்போது 34 வயது ஆகும் டிடிக்கும் அவரின் கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது மேலும் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கு டிடியின் கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் திவ்யதர்ஷினிக்கும் அவரின் கணவர் ஸ்ரீகாந்துகும் பிரச்சினை ஏற்பட்டது. அண்மைக்காலமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெறு விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தையும், அதன் பிறகு நடைபெற்ற திருமணப் பதிவையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

பரஸ்பர முறையில் விவாகரத்து கோரி ஒரு தம்பதியினர் மனு தாக்கல் செய்தால் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கப்படும் அதன் பிறகு விவாகரத்து பெறும் முடிவில் உறுதியாக இருந்தால் விவாகரத்து வழங்கப்படும்.

இதையடுத்து டிடி மற்றும்  ஸ்ரீகாந்த ரவிச்சந்திரன் ஆகியோர்  எதிர்ப்பார்த்தபடி உடனடியாக விவாகரத்து கிடைக்கும் என தெரிகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!