
பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளினி டிடி.,யைப் பிடிக்காதவர்கள் இருக்க வாய்ப்பே இல்லை . அந்த அளவிற்கு தன்னுடைய கலகலப்பான பேச்சால் அனைத்துத் தரப்பு ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் இவர்.
இப்போது, இவரைப் பற்றி வெளிவந்துள்ள ஒரு தகவல் அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது என்னவென்றால், இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் ஸ்ரீகாந்தை விவாகரத்து செய்ய மனு தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே கணவருடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்பட்டது.
மேலும் இவர் நடித்து வெளிவந்த ப.பாண்டி படத்தில் தன்னுடைய பெயரை திருமதி என்று குறிப்பிடாமல் செல்வி என்று குறிப்பிட்டு பிரிவை உறுதிப் படுத்தினார். இவரிடம் செல்வி என்று குறிப்பிடக் காரணம் கேட்டும் இதற்கு பதில் கொடுக்க விருப்பம் இல்லை எனத் தெரிவித்தார்.
தற்போது இவர்களது பிரிவை உறுதி செய்யும் விதத்தில், டி டி குடும்ப நல நீதிமன்றத்தை நாட உள்ளதாகக் கூறப்படுவது, அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இதுவரை டி டி தன்னுடைய விவாகரத்து சம்பந்தமாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.