
பொதுவாக ஆண்கள்தான் பெண்களை துரத்தி துரத்தி காதலித்து தங்களுடைய அன்பை வெளிப் படுத்துவார்கள் என கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இங்கே ஒரு பெண் ஆணைத் துரத்தித் துரத்திக் காதலித்து வித்தியாசப் படுத்தியிருக்கிறார்.
சமீபத்தில்கூட பிரபல தொலைக் காட்சியில் சீரியல் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை ஆலியா மானசா, தன்னுடைய காதலனை துரத்தித் துரத்திக் காதலித்ததாகவும், ஆனால் அவர் தன்னை முதலில் காதலிக்க மறுத்து பின்பு ஒருவழியாக காதலை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதே போல் தற்போது தன்னுடைய காதல் அனுபவம் குறித்து ஊடகத்தில் பேசியுள்ள பிரபல தொகுப்பாளினி மணிமேகலை, தன்னுடைய காதல் கணவர் ஹுசைனை தான்தான் தொடர்ந்து போன் செய்து காதலிக்க வைத்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ஹுசேனை முதலில் சந்தித்தது 'மொட்ட சிவா கெட்ட சிவா' படப்பிடிப்பு தளத்தில் தான். இவரைப் பார்த்ததுமே ஒரு க்ரஷ் ஏற்பட்டது. நடனமும் சூப்பராக ஆடினார். இதனால் பார்த்ததுமே மிகவும் பிடித்து விட்டது.
நாலு நாள் கஷ்டப்பட்டு, ஹுசைனின் நம்பர் வாங்கி அவருக்கு கால் பண்ணும் போது, அவர் என்னை மதிக்கவில்லை... இதனால் தொடர்ந்து அவருக்கு போன் செய்தேன். பின்பு எங்களுக்குள் காதல் வந்தது என தெரிவித்துள்ளார் மணிமேகலை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.