
பல்லுக்கு பல் கண்ணுக்கு கண்....
பெண் என்றாலே வாழ்க்கை முழுவதும் போராடுபவளாக தான் இந்த சமுதாயத்தில் இருக்க முடியும்.இதற்கெல்லாம் உதாரணமாக பிரபல தனியார் தொலைகாட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், 'தன் மனதை புண்படுத்திய சில விஷயத்துக்காக ஆவேசமாகவும், அதே சமயத்தில் தன்னுடைய நேர்மையான கருத்தையும் தெரிவித்து உள்ளார்
லட்சுமி ராமகிருஷ்ணனை சீண்டிய அருவி இயக்குநர்...
அருண் பிரபு இயக்கத்தில் வெளியான அருவி படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கிண்டல் செய்யும் காட்சியை வைத்துள்ளனர்.இதனால், மனதளவில் புண்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்
“அருவி இயக்குனருக்கோ அல்லது அவரின் குடும்பத்தாருக்கோ கள்ளக்காதல் இருக்கலாம்....அதனால் தான் அவருக்கு இந்த ஷோ பற்றி நல்லாவே தெரிந்து இருக்குனு”...நெட்டீசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு ட்வீட் செய்துள்ளார்...
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், சீறி பாயும் சிங்கமாய் மாறிய லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர்கள் அல்லது இயக்குனருக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேர் கேமரா முன்பு சந்தித்து என் கேள்விக்கு விடை கொடுக்க முடியுமா என்று சவால் விடுத்துள்ளார்....
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியிலேயே லெப்ட் ரைட்டுனு வாங்கும் போது,சம்மந்தப்பட்டவர்கள் கேமரா முன் கிடைத்தால் என்னென்ன கேள்விகள் எழுமோ....என பலரும் எதிர்பார்க்கிறார்கள்
இதற்கு முன்னதாக எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர் மீதான பார்வையை விட,மிக கேவலமாக பார்வை தான் தமிழகத்தில் உள்ளது என மனம் வருந்தி ட்வீட் செய்து உள்ளார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.