
. மலையாளத்தில் 2006 ஆம் ஆண்டு சக்கர முத்து என்கிற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர், தமிழில் பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், சீரியல், தொகுப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என தன்னுடைய திறமையை கலையுலகில் பல்வேறு பரிணாமங்களில் பிரதிபலித்துக் காட்டினார்.
இவர் தொகுப்பாளராக இருந்து நடத்தி வரும் ஒரு நிகழ்ச்சி, தொடர்ந்து பல வருடங்களாக பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது, அதே போல் பலர் லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியை கிண்டல் செய்வது போல் நிகழ்சிகளில் நடித்துக் காட்டி, பிரச்னைகளையும் வளர்த்துள்ளார்கள்.
இந்நிலையில் ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்த கடவுள் இருக்கான் குமாரு படத்தில், ஆர்.ஜே .பாலாஜி மற்றும் படக்குழுவினர் லட்சுமி ராமகிருஷ்ணனை கலாய்க்கும் விதத்தில், ஒரு காமெடி வைத்திருந்தனர். இதற்காக அந்தப் படக்குழுவினர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு இறங்கினார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
தற்போது இதே போல் இவரை கடுப் பேற்றும் அளவிற்கு கடந்த வாரம் வெளியான அருவி படத்தில் ஒரு சீன் வந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், ' ஒரு பெண்மணியாக ..., எதோ சில வழிகளில் வெற்றிகரமாக அதிலும் ஊடகத்தில் வெளியில் அதிகம் பேசுபவராக, தமிழகத்தில் வசிக்கும் பிராமண சமுதாயத்தில் பிறந்து வந்தவராக குறிப்பாக பாலக்காடு ஐயர் பாஷையை பேசுபவராக இருக்கும் என்னை... HIV தொற்றால் பாதிக்கப்பட்டவரை விட மோசமாக பார்க்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
இவர் இப்படி தெரிவித்துள்ளதும் புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் 'HIV' நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கேவலாமாக பார்க்கப்படுபவர்களா...? என பலர் தொடர்ந்து லட்சுமி ராமகிருரிஷ்ணனிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வரும் இவர் தற்போது இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.