திரிஷா தனது கைப்பையில் எப்பொழுதும் சில உணவுகளை வைத்திருப்பாராம். அவை ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள் மற்றும் பழங்களாகும்.
ஒரு காலகட்டத்தில் அசைக்கமுடியாத முன்னணி நாயகியாக இருந்த திரிஷா, அஜித், விஜய் என அன்றைய சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி போட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சமீப காலமாக இவருக்கு தமிழ் திரைத்துறையில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காததை அடுத்த தெலுங்கு சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார். அதோடு மணிரத்தினத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்து உள்ளார். இதில் திரிஷாவின் ரோலைக்காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சோழ வம்ச இளவரசியான குந்தவை வேடத்தில் வரும் த்ரிஷாவின் ப்ரோமோஷன் விழா புகைப்படங்கள் சமீப காலமாகவே சமூக ஊடகங்களை நிரப்பி வருகிறது. வண்ண வண்ண சேலையில் தேவதையாய் ஜொலிக்கிறார்.
குடும்பத்துடன் இருக்கும் இனிமையான சூழலை வெளியிட்ட சாய் பல்லவி...வைரல் போஸ்ட் இதோ
இந்நிலையில் 39 வயதை கடந்துவிட்ட திரிஷா இன்னும் இவ்வளவு அழகாக இன்றைய நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதத்தில் இருப்பதற்கான டயட் காரணங்களை வெளிப்படுத்தியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான திரிஷா மிக மிக கடுமையான உணவுத் திட்டங்களையும், நம்பிக்கையூட்டும் உடற்பயிற்சிகளையும் பின்பற்றுகிறாராம். எப்போதும் வெளி உணவை தவிர்க்கும் த்ரிஷா, பசி பிரச்சினைகளை தவிர்க்க வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே உட்கொள்கிறாராம்.
மேலும் செய்திகளுக்கு...அக்கா மகளை காப்பாற்றினால் ...கூல் சுரேஷை விட சிம்புவிற்கு அதிகமாக குரல் கொடுப்பேன் : விஜயலட்சுமி
மேலும் திரிஷா கிருஷ்ணாவின் கூற்றுப்படி, ஆம்லேட்டுகள் மற்றும் பரோட்டாக்கள் போன்றவற்றை காலை உணவை உட்கொள்கிறார். இது அதிக ஆற்றலுடன் அவருக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்கிறது. அதோடு திரிஷா தனது கைப்பையில் எப்பொழுதும் சில உணவுகளை வைத்திருப்பாராம். அவை ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள் மற்றும் பழங்களாகும்.
தனது புதிய பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகள், உடற்பயிற்சிகள், யோகா போஸ்களை மேற்கொண்டு தனது உடலை வித்தியாசமான சூழ்நிலையிலும் சண்டையிடுவதற்காக தனது நெகிழ்ச்சி தன்மை உடன் தகுதியையும் உயர்த்தும் வகையில் ஒவ்வொரு நாளும் தனக்கு புதிய சவால்களை அளித்து வருகிறார் திரிஷா.