
நடிகை த்ரிஷா, ட்விட்டரில் ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்து, தன்னுடைய காதலை உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 15 வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக மட்டுமே நடித்து, தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் த்ரிஷா.
இந்நிலையில் த்ரிஷா, சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களுக்கு எழுப்பிய கேள்விக்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தார்.
அப்போது ரசிகர் ஒருவர், உங்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் தற்போது என்ன என்று கேள்வி எழுப்பியதற்கு, அவர் கொடுத்த பதில் ரசிகைகளை ஷாக் ஆக்கியது. இந்த கேள்விக்கு த்ரிஷா ‘single but taken’ என பதிலளித்தார். இதனால் தற்போது மீண்டும் த்ரிஷா ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. மேலும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும் தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த த்ரிஷா, 'Do it when it's a want and not a need” என்று பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.