
நடிகர் விஷால் சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் சமூக வலைத்தளதில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உரையாடினார்.
இந்த உரையாடலில் அவர் ஒருசில சுவாரஸ்மான கேள்விக்கு வித்தியாசமான பதில்களை அளித்துள்ளார்.
அவற்றில் ஒன்று 'த்ரிஷாவை பற்றி ஒருசில வார்த்தைகள் கூறவும் என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த விஷால், 'நான் பெண்ணாக பிறந்திருந்தால் த்ரிஷாவாக வாழ்ந்திருப்பேன் என்று கூறினார்.
அவருடைய வாழ்க்கையை வாழ்பவர் வாழ்க்கையில் முழுமை பெறுவார்கள்' என்று கூறியுள்ளார்.
அதேபோல் 'இளையதளபதி விஜய் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது? என்ற கேள்விக்கு பதில் அளித்த விஷால் 'பூவே உனக்காக' என்று கூறியுள்ளார்.
மேலும் இன்னொரு ரசிகர், 'அஜித் குறித்து ஏதாவது கூறுங்கள். அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா? என்று கேட்ட கேள்விக்கு 'கண்டிப்பாக நடிப்பேன்.
அவர் ஒரு திறந்த மனதை உடையவர்' என்று பதில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.