தீபாவளிக்கு நயன்தாரா தமிழ் புத்தாண்டுக்கு த்ரிஷா..! வெளியான சூப்பர் தகவல்!

Published : Apr 04, 2021, 04:26 PM IST
தீபாவளிக்கு நயன்தாரா தமிழ் புத்தாண்டுக்கு த்ரிஷா..! வெளியான சூப்பர் தகவல்!

சுருக்கம்

நடிகை த்ரிஷா நடித்துள்ள திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

நடிகை த்ரிஷா நடித்துள்ள திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில், நயன்தாராவிற்கு அடுத்து  தமிழ் திரையுலகில் சுமார் 15 வருடங்களாக, கதாநாயகியாக நடித்து வரும் பெருமைக்கு உரியவர் த்ரிஷா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 96 திரைப்படம் சூப்பர் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'கார்த்திக் டயன் செய்த எண்' குறும்படத்தில் ஆகியவை வெளியானது.

மேலும், ராம் என்கிற மலையாள படம் உட்பட அரை டஜன் படங்கள் இவர் கைவசம் இருந்தாலும், கொரோனா பிரச்சனை காரணமாக எடுத்து முடிந்த படங்கள் கூட இன்னும் வெளியாகாமல் உள்ளது. த்ரிஷா நடித்துள்ள திரைப்படம் ஒன்று ஓடிடியில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.

த்ரிஷா நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள, ’பரமபதம் விளையாட்டு’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே ஒரு சில முறை அறிவிக்கப்பட்டு அதன்பின் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திரிஷாவின் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் உற்சாகத்தில் உள்ளனர்.

த்ரிஷா, நந்தா, ரிச்சர்ட் ரிஷி, வேலராமமூர்த்தி, ஏஎல் அழகப்பன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை திருஞானம் இயக்கியுள்ளார். அம்ரேஷ் கணேஷ் இசையில், தினேஷ் ஒளிப்பதிவில், பிரேம்குமார் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தீபாவளி ஸ்பெஷலாக நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் வெளியான நிலையில், தற்போது தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக த்ரிஷாவின் 'பரமபத விளையாட்டு' வெளியாக உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?